செய்திகள் மலேசியா
தேசிய முன்னணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருந்ததால், சட்டமன்றத்தை முன்கூட்டியே கலைத்ததாகக் கூறப்படுவதை ஓன் ஹபிஸ் மறுத்துள்ளார்
ஜொகூர்பாரு:
16ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருந்ததால், சட்டமன்றத்தை முன்கூட்டியே கலைத்ததாக சில தரப்பினர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை மந்திரி புசார் டத்தோ ஓன் ஹபிஸ் காசி மறுத்துள்ளார்.
தனது தலைமையிலான மாநில அரசு மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிப்பதால், இந்தக் குற்றச்சாட்டை ஒரு தூண்டுதல் என்று அவர் விவரித்தார்.
நிகழக்கூடிய பல காரணங்களை கருத்தில் கொண்டதாலேயே சட்டமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை எங்களுக்கு அவகாசம் இருக்கும்போது, நாங்கள் ஏன் இப்போது கலைக்கப்படுகிறோம் என்று பலர் வியக்கிறார்கள்.
அதற்கான பதில், நாங்கள் அடுத்த ஆண்டுக்கான கால அட்டவணையை ஏற்கனவே பார்த்துவிட்டோம் என்பதுதான்.
மூன்றாவது மாதம், நான்காவது மாதம் ஆகியவை நோன்பு மாதங்கள் மற்றும் ஹரி ராயா ஆகும்.
ஜொகூரில், நாங்கள் வழக்கமாக ராயாவைத் தாமதமாகக் கொண்டாடுவோம்.
ஒரு மாத ராயாவிற்குப் பதிலாக, சில சமயங்களில் ஜோஹோரில் அது ஒன்றரை மாதம் வரை தாமதப்படுத்தப்படும், அதற்கு முன்பு ராயா நோன்பு கடைப்பிடிக்கப்படும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 11, 2026, 9:14 pm
ஜோ லோவின் ஆடம்பர மாளிகையைப் பறிமுதல் செய்ய சைப்ரஸ் நீதிமன்றம் உத்தரவு
June 11, 2026, 5:53 pm
311 கிராம் கஞ்சா வழக்கு: மரண தண்டனையில் இருந்து தப்பிய திருநங்கைக்கு 5 ஆண்டு சிறை
June 11, 2026, 5:41 pm
