செய்திகள் மலேசியா
ஜோ லோவின் ஆடம்பர மாளிகையைப் பறிமுதல் செய்ய சைப்ரஸ் நீதிமன்றம் உத்தரவு
கோலாலம்பூர்:
பணமோசடி தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தலைமறைவான மலேசிய தொழிலதிபர் ஜோ லோவிற்கு சொந்தமான ஒரு ஆடம்பர மாளிகையைப் பறிமுதல் செய்ய சைப்ரஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சைப்ரஸ்மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.
சைப்ரஸ் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி, சைப்ரஸ் தலைமை வழக்கறிஞர் ஜார்ஜ் சவ்விடெஸ், நாட்டின் பணமோசடி தடுப்பு ஆணையமான மோகாஸ் ஆகியோரின் கூட்டு மனுவைத் தொடர்ந்து, நிகோசியா மாவட்ட நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக அந்த அறிக்கை தெரிவித்தது.
லோவின் வழக்கறிஞர்கள் இந்த மனுவிற்கு ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
சுமார் 30.5 மில்லியன் ரிங்கிட் மதிப்புடையதாக மதிப்பிடப்பட்டுள்ள இந்த வில்லா, அயியா நாபா என்ற கடலோர சுற்றுலா நகரில் அமைந்துள்ளது.
இது, தங்க கடவுச்சீட்டு திட்டம் என்று பரவலாக அறியப்பட்ட, சைப்ரஸின் தற்போது செயலிழந்த முதலீட்டின் மூலம் குடியுரிமை வழங்கும் திட்டத்தின் வழியாக வாங்கப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 11, 2026, 5:53 pm
311 கிராம் கஞ்சா வழக்கு: மரண தண்டனையில் இருந்து தப்பிய திருநங்கைக்கு 5 ஆண்டு சிறை
June 11, 2026, 5:41 pm
