நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எம்ஐபிபி கட்சி தொடர்ந்து தேசியக் கூட்டணியில் நீடிக்க வேண்டும் என பாஸ் கேட்டுக் கொண்டுள்ளது: புனிதன்

கோலாலம்பூர்:

எம்ஐபிபி கட்சி தொடர்ந்து  தேசியக் கூட்டணியில் நீடிக்க வேண்டும் என பாஸ் கேட்டுக் கொண்டுள்ளது.

மலேசிய இந்திய மக்கள் கட்சியின் (எம்ஐபிபி) தேசியத் தலைவர்  பி. புனிதன் இதனை கூறினார்.

கூட்டணியின் மூத்த தலைவர்களுடன் சுமார் இரண்டு மணி நேரம் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மலேசிய இந்திய மக்கள் கட்சியை தேசியக் கூட்டணியில் நீடிக்குமாறு பாஸ் கேட்டுக் கொண்டுள்ளது.

தேசியக் கூட்டணியின் தலைவர் அஹ்மத் சம்சுரி மொக்தாரும் கலந்துகொண்ட இந்த சந்திப்பில்,

பெர்சத்துவுடனான அரசியல் ஒத்துழைப்பை முடிவுக்குக் கொண்டுவரும் பாஸ் கட்சியின் முடிவைத் தொடர்ந்து, கூட்டணியின் எதிர்காலப் போக்கு குறித்து விவாதிக்கப்பட்டது என்று புனிதன் விளக்கினார்.

மேலும் இந்த சந்திப்பு மிகவும் சாதகமாக இருந்தது.

தேசியக் கூட்டணியின் எதிர்காலப் போக்கு, கூட்டணியை வலுப்படுத்தும் வழிகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்.

மற்ற கட்சிகளும் சலுகைகளை வழங்கி வேண்டும் என பாஸ் கட்சியை நாங்கள் கேட்டுக் கொண்டோம்.

அவரைப் பொறுத்தவரை எம்ஐபிபி கூட்டணியிலேயே நீடிக்குமாறு பாஸ் வலியுறுத்தியது.

ஆக மத்தியக் செயற்குழுக் கூட்டத்திற்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை ஒரு முடிவை எடுப்போம் என்று அவர்களிடம் கூறினோம்.

அவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டனர் என்று புனிதன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்



தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset