நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கவிஞர் சீனி நைனா முகம்மது ஆற்றிய தமிழ்த் தொண்டு அளப்பரியது: தொல்காப்பியத் திருக்கோட்டம் உருவாக்க நிதி திரட்டும் நிகழ்ச்சியில் டத்தோஸ்ரீ எம். சரவணன் புகழாரம்

கோலாலம்பூர்:

கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்களுக்காக தொல்காப்பியத் திருக்கோட்டம் உருவாக்குவதற்கான நிதி திரட்டும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக தலைநகர் ம.இ.கா தலைமையகத்தில் ம இ கா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம் சரவணன் தலைமையில் நடைபெற்றது. 

தலைமை உரையாற்றிய டத்தோஸ்ரீ எம் சரவணன், "இஸ்லாம் எங்கள் வழி, இன்பத்தமிழ் எங்கள் மொழி என்று தமிழுக்கு ஐயா அவர்கள் ஆற்றிய தொண்டு அளப்பரியது. இந்த நாட்டில் நமது சேவையும், பங்களிப்பும் வரலாற்றில் பதிக்க வேண்டியது. அந்த வகையில் ஐயா போன்றவர்களுக்கு இது போன்ற கட்டடம் உருவாவது அவருக்கான பெருமை மட்டுமல்ல, தமிழுக்கான பெருமையும் கூட.

May be an image of one or more people, dais and text that says "கவிஞர் செ.சீனி செ. ഒ தெ ககாப்பியத் (F -க்ச நிதி தம் 35-12326 EHSAN EHSAN PLANT & PROPERTY SDN. BHD. 100626 BOMM KA KAVIN SEENI NAINA MULTIPURPOSE HALL ONE HUNDRED THOUSAND RM100,000.00 000.00 Kлora m3Kpии RINGGIT MALAYSIA MALA SIA ONLY ie EHSANPLANT&PROPERTYSDN.B EHSAN PLANT &PROPERTY SDN. BHD. SUTE C-20-3A C,NEGANAVEMEL APKWANSENG 50450 KUMIAL UALALUMPUR 1:00 120309301 35・1232610 800288709219 800288 24 2uas"

"இந்த நாட்டின் மிகச் சிறந்த தமிழ் அறிஞர் அவர். அவரது தமிழ் ஆற்றல் போற்றுதலுக்குரியது. எத்தனையோ பேருக்கு அவர் தமிழ் மொழியையும் இலக்கியத்தையும் அவர் போதித்துள்ளார். நாங்கள் நடத்தும் கம்பன் விழாவாகட்டும், கண்ணதாசன் விழாவாகட்டும் அவர் இல்லாமல் நடைபெறாது.

"அவரது உரையை முதன்முதலில் நான் கேட்டதும் பார்த்ததும் டத்தின் ஸ்ரீ இந்திராணி அவர்கள் நடத்திய எழுத்தாளர் தின நிகழ்ச்சியில் தான். ஏதோ தமிழகத்தில் இருந்து பேச வந்த தமிழ் அறிஞர் என்றுதான் நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது அவர் நம் நாட்டு கவிஞர் என்று. அதன் பிறகு நான் அவரை விடவில்லை.

May be an image of ‎dais and ‎text that says "‎ந்பி கவிஞர் செ.சீனி செ ல்கா பியத் a உருகாக்க ாக் وع திர் லபை on CIMB CIMBISLAMIC ISLAMIC CIVB RERHADr தா ၉ု့ကြို့ 14-12441 PERSATUAN TAML KURINJITHTHITT THITTU SEPULUH RIBU SAHAJA PERAK 10062G FM1 10,000.00 நேர பம், ம 100 '000735 பனை 44"6리64: 65CL a5 260" จ‎"‎‎

"இன்று நம் நாட்டின் தமிழ் வாழ்த்து, பொங்கல் வாழ்த்து அனைத்தையும் அவர் படைத்து தந்துள்ளார். ஒரு மனிதர் வாழ்ந்து சென்ற பிறகும் அவர் புகழ் நிலைக்க வேண்டும். அப்படிப்பட்ட சரித்திரம் படைத்த மனிதர் தான் இறையருட் கவிஞர் சீனி அவர்கள்.

"கடந்த ஆண்டு எனது பிறந்த நாளில் அவருக்கு ஒரு கட்டடம் கட்ட வேண்டும் என்ற வேண்டுகோளோடு என்னை வந்து பார்த்தார் டத்தோஸ்ரீ இக்பால். செய்துவிடுவோம் என்று நான் உறுதி கூறினேன்.

May be an image of one or more people, dais and text that says "கவிழ செ.சி தெழ்காப்மி காப்மி தெ ខ க்ச நைனா முக திருக்கோ டும் நிக மால ம.இ.கா. ம. தே ரர் எம். ச T நாடாளுமா இன் : :மாலை 5.30 தே.கா, கோலால ந்து வளர்பவ"

"இன்று டான்ஸ்ரீ ஹனிபா, டத்தோ அப்துல் ஹமீத், டத்தோ சகாதேவன், டான்ஸ்ரீ குமரன், டத்தோ ஜமருல் கான், டத்தோ வீரா ஷாகுல் ஹமீத், ராஜேந்திரன் போன்றோர் கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்களின் நினைவாக தொல்காப்பியத் திருக்கோட்டம் எழுப்ப தோள் கொடுத்துள்ளார்கள். 

"இந்த நல்ல காரியத்திற்காக கிள்ளி கொடுக்காதீர்கள். அள்ளிக் கொடுங்கள் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு அவர் உரையாற்றினார்.

May be an image of ‎text that says "‎கவிஞர் நால்க ഉ சீனி ரைளா பபியத் க்டே 5வ CIMB CIMBISLAMIC ISLAMIC CИB CIMBISLAME GLAMIC BANK HERH omEKT -ားမ 64-12441 Bayar Tarikh pace 100626 00 Bimeeir Ringueit Malaysia PERSATUANT AMIL KURINJIH THITTU, POH PERAK SEPULUH RIBU SAHAJA R10,000.00 :00 '00073 الملة 44"12446 6606 65 268"‎"‎

May be an image of ‎dais and ‎text that says "‎கவிஞர் மகா க் செ சென்னி னனி நைன யத் திரு திரட் மை மாக் தாப் لعأ ಜో நதா நேரப் ம்ம. D, ம.ு தமி ண‎"‎‎

May be an image of one or more people

"அங்கு ஒரு தமிழ் ஆராய்ச்சி நிலையமும் இருக்கும். நூலகமும் இருக்கும். பலர் பள்ளியும் இருக்கும் என்று செயலவையின் சார்பில் தமிழ்மாறன் தனது துவக்க உரையில் குறிப்பிட்டார்.

பேங்க் நெகாராவின் அதிகாரியான அல் ஹாபிஸ் செய்யது ஜாபிர் செய்யது அலியின் பிரார்த்தனையோடு  துவங்கிய நிகழ்ச்சியை கட்டடக்குழு ஆலோசகரும் இஸ்லாமியக் கல்வி வாரியத் தலைவருமான  டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

May be an image of wedding

தமிழ் குறிஞ்சித் திட்டு செயலாளர் பிரபு நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset