செய்திகள் உலகம்
17 ஆண்டுகள் போலி விமானி உரிமத்துடன் விமானங்களை இயக்கிய முன்னாள் ஏர் கனடா விமானி கைது
ஒட்டாவா:
கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக போலி விமானி உரிமத்தைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான விமானங்களை இயக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஏர் கனடாவின் முன்னாள் விமானி ஒருவர், தற்போது கடுமையான குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொண்டு வருகிறார்.
கனடா காவல்துறை வெளியிட்ட தகவலின்படி, ஜெஃப்ரி வால் (Geoffrey Wall) என்ற முன்னாள் விமானி கடந்த ஜூன் 1ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், 2009 முதல் 2025 வரை தேவையான உயர்நிலை விமானி உரிமம், கட்டாயத் தகுதித் தேர்வுகள் இன்றி, 900-க்கும் மேற்பட்ட உள்நாட்டு, சர்வதேச விமானங்களை அவர் இயக்கியதாக தெரியவந்துள்ளது.
அந்தக் காலகட்டத்தில் அவர் 2 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் (சுமார் 8.14 மில்லியன் ரிங்கிட்) அதிகமான ஊதியம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீல் பிராந்திய காவல்துறையின் துணைத் தலைவர் மிலினோவிச், “இந்தச் சம்பவம் ஒரு திரைப்படக் கதையைப் போன்றது” என குறிப்பிட்டார்.
2002ஆம் ஆண்டு வெளியான Catch Me If You Can திரைப்படத்தில் போலி விமானியாக அதிகாரிகளை ஏமாற்றும் கதாபாத்திரத்துடன் இந்தச் சம்பவத்தை அவர் ஒப்பிட்டார்.
ஏர் கனடாவில் 27 ஆண்டுகள் பணியாற்றிய ஜெஃப்ரி வால், வணிக விமானங்களை இயக்குவதற்கான சில உரிமங்களை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
எனினும், 2009ஆம் ஆண்டு கேப்டனாக பதவி உயர்வு பெற்றபோது கட்டாயமாக இருக்க வேண்டிய Airline Transport Pilot Licence for Aeroplanes (ATPL-A) எனப்படும் உயர்நிலை விமானி உரிமத்தை அவர் ஒருபோதும் பெற்றிருக்கவில்லை என காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது.
இதனிடையே, ஜெஃப்ரி வால் 2025ஆம் ஆண்டு ஓய்வு பெற்றதாகவும், அதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரியில் ‘Project Icarus’ என்ற பெயரில் ஒழுங்குமுறை, குற்றவியல் விசாரணைகள் தொடங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிர்ச்சி சம்பவம், விமானப் பாதுகாப்பு, தகுதிச் சான்றிதழ் கண்காணிப்பு நடைமுறைகள் குறித்து கனடாவில் பரபரப்பான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
July 27, 2026, 11:18 am
தென்கொரியாவில் நடந்த சண்டையில் மலேசிய நாட்டவர் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணம்
July 27, 2026, 11:17 am
கழிவறை கிண்ணத்தில் நிரப்பப்பட்ட சோடா பானத்தை விரைந்து குடிக்கும் போட்டி: பொதுமக்கள் கண்டனம்
July 26, 2026, 4:44 pm
கடுமையான காட்டுத்தீ: பிரான்ஸும் ஸ்பெயினும் திணறுகின்றன
July 26, 2026, 10:58 am
இந்தோனேசியாவில் 70 கிலோ தங்கத்துடன் முன்னாள் ஊழல் ஒழிப்பு அதிகாரி கைது
July 24, 2026, 4:46 pm
அமெரிக்காவின் புதிய வரி விதிப்புக்குச் சீனா கடும் கண்டனம்
July 24, 2026, 3:05 pm
செங்கடலில் 2 சவூதி அரேபிய எண்ணெய் கப்பல்கள் மீது ஹூதி போராட்டவாதிகள் தாக்குதல்
July 23, 2026, 12:56 pm
ஆய்வறிக்கை விளக்கக் கூட்டத்தில் பாம்புடன் கூட்டத்தை நடத்திய பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்
July 23, 2026, 11:22 am
குடிபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் இரு சுவிஸ் நாட்டு விமானிகள் பணி இடைநீக்கம்
July 23, 2026, 10:04 am
