நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எதிரணிகள் பிளவுபட்டுள்ளதால் நம்பிக்கை கூட்டணி வலுவாக இல்லை: சைபுடின்

கோலாலம்பூர்:

நம்பிக்கை கூட்டணி அரசியல் பலம் பெறுவதற்காக எதிர்க்கட்சிகளின் பிளவுகளைச் சார்ந்திருக்கவில்லை.

மாறாகத் தனது சொந்த பலத்தைத் தொடர்ந்து சீராகக் கட்டமைத்து வருகிறது என்று அதன் பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் கூறினார்.

சமீபத்தில் பெர்சத்துவுடனான அரசியல் ஒத்துழைப்பை  பாஸ் கட்சி முறித்துக் கொண்டது.

இந்த முடிவு பற்றி கருத்து தெரிவித்த சைபுடின், தேசியக் கூட்டணிக் கட்சியில் நிலவும் உட்கட்சி குழப்பம், பாஸ் கட்சியின் முந்தைய வரலாற்றுப் பதிவுகளின் அடிப்படையில் புதிதல்ல.

மேலும் நமது எதிரிகளின் பிளவுகளால் நாம் வலிமை பெறுவதில்லை. நமது சொந்த வலிமையை நாமே உருவாக்கிக் கொள்வதால் வலிமை பெறுகிறோம்.

நம்பிக்கை கூட்டணியில், நாம் உருவாக்கும் முயற்சிகளின் மூலமே வலிமை பிறக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset