செய்திகள் மலேசியா
செயற்கை நுண்ணறிவு யுகத்திலும் மனிதநேயத்தை மையமாகக் கொண்ட வேலைவாய்ப்புச் சூழலை உறுதி செய்ய மலேசியா உறுதி: டத்தோஸ்ரீ ரமணன்
கோலாலம்பூர்:
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலகளவில் வேலைச் சூழலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வரும் வேளையில், மனிதநேயத்தை மையமாகக் கொண்ட எதிர்கால வேலை வாய்ப்புச் சூழலை உருவாக்குவதில் மலேசியா உறுதியுடன் உள்ளது.
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை தெரிவித்தார்.
ஜெனீவாவில் நடைபெற்ற 114ஆவது சர்வதேச தொழிலாளர் மாநாட்டின் (ஐஎல்சி) முழு அமர்வில் பேசிய அவர், உரிமைகள், சமத்துவம், வளர்ச்சியை உறுதி செய்வது அவசியம்.
தொழில்நுட்பம் என்பது மனித கண்ணியத்தையும் கண்ணியமான வேலைவாய்ப்பையும் மேம்படுத்தும் போது மட்டுமே முன்னேற்றமாக கருதப்படும்.
ஏஐ தொழில்நுட்பம் சமூகத்தில் மாற்றங்களை கொண்டு வந்துவிட்டது என்பதை மறுக்க முடியாது.
ஆனால் அந்த மாற்றம் நியாயமானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், மனித கண்ணியத்திற்கு முன்னுரிமை அளிப்பதாகவும் இருப்பதை உறுதி செய்வதே உண்மையான சவாலாக உள்ளது என்று அவர் கூறினார்.
மலேசியாவின் அணுகுமுறை 'மடானி' கொள்கையின் அடிப்படையில் அமைந்திருப்பதாகவும், இதில் கருணை, நீதி மற்றும் மனிதநேயம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வலியுறுத்துவது போல, மதிப்பீடுகள் இல்லாத தொழில்நுட்பம் ஏற்றத்தாழ்வுகளையும் பிளவுகளையும் மட்டுமே அதிகரிக்கும் என்று குறிப்பிட்ட ரமணன், எதிர்கால வளர்ச்சி என்பது இயந்திரங்களால் அல்லாமல், மனிதர்களை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றார்.
மலேசியாவின் 17 மில்லியனுக்கும் அதிகமான பணியாளர்களை ஏஐ பொருளாதாரத்திற்குத் தயார்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 10, 2026, 6:14 pm
திரைத்துறையின் மாபெரும் இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இரங்கல்
June 10, 2026, 4:26 pm
வீட்டு குளியலறையில் உயிரிழந்த நிலையில் மாது கண்டுபிடிக்கப்பட்டார்
June 10, 2026, 1:11 pm
மலேசியா-ஜப்பான் உறவில் புதிய மைல்கல்: PETRONAS-JERA வரலாற்று ஒப்பந்தம்
June 10, 2026, 12:07 pm
காட்டை மறைவிடமாக்கிய சட்டவிரோத கும்பல் சிக்கியது: 5 பெண்கள் உட்பட 12 மியான்மர் நாட்டவர்கள் கைது
June 10, 2026, 10:55 am
