செய்திகள் மலேசியா
திரைத்துறையின் மாபெரும் இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இரங்கல்
கோலாலம்பூர்:
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவுக்கு மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாரதிராஜா மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் இவ்வேளையில் அன்னாரின் குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும்
டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
சில காலமாக வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டு, வீட்டில் இருந்தபடியே தீவிர சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் இமயம் புதன்கிழமை காலமானார்.
வீட்டில் சிகிச்சை பெற்று வந்த பாரதிராஜா சிகிச்சை பலனின்றித் தனது 84ஆவது வயதில் அதிகாலை காலமானார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இவரது மகன் மனோஜ் உடல்நலக் குறைவால் உயிரிழந்த துயரத்திலிருந்து மீளாத நிலையில், பாரதிராஜாவின் இந்த மறைவு அவரது குடும்பத்தினரையும் ரசிகர்களையும் மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது எதிர்பாராதது என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 10, 2026, 4:26 pm
வீட்டு குளியலறையில் உயிரிழந்த நிலையில் மாது கண்டுபிடிக்கப்பட்டார்
June 10, 2026, 1:11 pm
மலேசியா-ஜப்பான் உறவில் புதிய மைல்கல்: PETRONAS-JERA வரலாற்று ஒப்பந்தம்
June 10, 2026, 12:07 pm
காட்டை மறைவிடமாக்கிய சட்டவிரோத கும்பல் சிக்கியது: 5 பெண்கள் உட்பட 12 மியான்மர் நாட்டவர்கள் கைது
June 10, 2026, 10:55 am
