செய்திகள் மலேசியா
10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள எல்பிஎல், ஈவுட் தோட்ட தொழிலாளர் வீட்டு உரிமைப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: டத்தோ சிவநேசன்
ஈப்போ:
பேரா சுங்கை சிப்புட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்வு காணப்படாமல் இருந்து வரும் ஈவுட், எல்பிஎல் தோட்டங்களைச் சேர்ந்த 47 முன்னாள், தற்போதைய தோட்டத் தொழிலாளர்களின் வீட்டு உரிமைப் பிரச்சினைக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு காணப்படும்.
பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் இந்திய விவகாரங்களுக்கான தலைவருமான டத்தோ அ. சிவநேசன் தெரிவித்தார்.
தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் சார்பில் தொழிலாளர்களை சந்தித்த டத்தோ சிவநேசன், இப்பிரச்சினை குறித்து சைம் டார்பி நிறுவன அதிகாரிகள், நில அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற சிறப்புக் கூட்டத்தை நடத்தினார்.
இக்கூட்டத்தில், சைம் டார்பி நிறுவனத்திற்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை வீட்டு மனைத் திட்டத்திற்காக பேராக் மாநில அரசாங்கத்திடம் ஒப்படைக்க நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு சுமார் 4 மில்லியன் ரிங்கிட் என தெரிவிக்கப்பட்டது.
2018ஆம் ஆண்டு சைம் டார்பி நிறுவனம் இந்த 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்க ஒப்புக்கொண்டிருந்தாலும், கோவிட்-19 பெருந்தொற்று, அரசியல் மாற்றங்களால் திட்டம் இடைநிறுத்தப்பட்டது.
2020ஆம் ஆண்டு மனிதவள அமைச்சின் கீழ் நடைபெற்ற பேச்சுவார்தைகளிலும் இப்பிரச்சினை விவாதிக்கப்பட்டது.
பேரா மாநிலத்தில் முன்னர் அமல்படுத்தப்பட்ட கிராமப்புற குடியிருப்பு திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதால், அரசாங்கம் நேரடியாக சாலை, மின்சாரம், குடிநீர் மற்றும் வடிகால் வசதிகளை ஏற்படுத்தும் நடைமுறை இனி இல்லை என டத்தோ சிவநேசன் விளக்கினார்.
இனி இந்தத் திட்டம் மனிதவள அமைச்சின் கீழ் இருக்காது. நிலம் பேராக் மாநில அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு வருவதால், மாநில அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்று நடவடிக்கை எடுக்கும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 10, 2026, 6:14 pm
திரைத்துறையின் மாபெரும் இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இரங்கல்
June 10, 2026, 4:26 pm
வீட்டு குளியலறையில் உயிரிழந்த நிலையில் மாது கண்டுபிடிக்கப்பட்டார்
June 10, 2026, 1:11 pm
மலேசியா-ஜப்பான் உறவில் புதிய மைல்கல்: PETRONAS-JERA வரலாற்று ஒப்பந்தம்
June 10, 2026, 12:07 pm
காட்டை மறைவிடமாக்கிய சட்டவிரோத கும்பல் சிக்கியது: 5 பெண்கள் உட்பட 12 மியான்மர் நாட்டவர்கள் கைது
June 10, 2026, 10:55 am
