செய்திகள் மலேசியா
மலேசியா-ஜப்பான் உறவில் புதிய மைல்கல்: PETRONAS-JERA வரலாற்று ஒப்பந்தம்
டோக்கியோ:
எரிசக்தி, நிதித் துறைகளில் மலேசியா-ஜப்பான் உறவு மேலும் வலுப்பெறும் வகையில், நீண்டகால திரவ இயற்கை எரிவாயு (LNG) விநியோக ஒப்பந்தமும், ரிங்கிட்-யென் நாணயப் பரிவர்த்தனைகளை விரிவுபடுத்தும் முக்கிய முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
PETRONAS, JERA நிறுவனங்கள், 2028ஆம் ஆண்டு தொடங்கி 20 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் 20 இலட்சம் டன் LNG-ஐ ஜப்பானுக்கு வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நீண்டகால கொள்முதல் ஒப்பந்தத்தை இறுதிப்படுத்தியுள்ளன என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம், மலேசியா, ஜப்பான் இடையேயான பரஸ்பர நம்பிக்கை, உறுதியான நட்பு, மூலோபாய ஒத்துழைப்பின் உச்சக்கட்ட வெளிப்பாடாக அமைந்துள்ளதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
“2028 முதல் 20 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 20 இலட்சம் டன் LNG வழங்கும் நீண்டகால ஒப்பந்தத்தை PETRONAS, JERA இடையே வெற்றிகரமாக இறுதிப்படுத்தியுள்ளோம். இது இரு நட்பு நாடுகளுக்கிடையேயான நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் பிரதிபலிக்கும் அபாரமான சாதனையாகும்,” என்றார் அவர்.
ஜப்பானிய பிரதமரின் அலுவலகத்தில், தனது ஜப்பான் பிரதமர் சனாய் தகாய்ச்சி உடனான சந்திப்புக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இதனுடன், புதிய நிதி ஏற்பாடுகள், இருதரப்பு நாணயப் பரிமாற்ற ஒப்பந்தங்கள் வாயிலாக இரு நாடுகளும் தங்களது நிதி ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த ஒப்புக்கொண்டுள்ளன.
குறிப்பாக, ரிங்கிட், யென் நாணயங்களைப் பயன்படுத்தி நேரடி பரிவர்த்தனைகளை அதிகரிப்பதற்கான முயற்சிகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இது இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக, பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்றாம் தரப்பு நாணயங்களின் மீதான சார்பைக் குறைத்து, மலேசியா, ஜப்பானின் பொருளாதார நிலைத்தன்மையை அதிகரிக்க உள்ளூர் நாணயப் பரிவர்த்தனைகள் பெரும் பங்காற்றும் என்றும் அன்வார் தெரிவித்தார்.
“ரிங்கிட், யென் வழி உள்ளூர் நாணயப் பரிவர்த்தனைகளை விரிவுபடுத்துவது எனக்கு மிகவும் முக்கியமான விஷயம். இதன் மூலம் இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் பொருளாதார ரீதியாக மேலும் நெருக்கமாக இயங்க முடியும். இந்த விவகாரத்தில் மலேசிய தேசிய வங்கிக்கும் ஜப்பான் வங்கிக்கும் இடையே ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது,” என்றார் அவர்.
இந்த முன்னேற்றங்கள், இரு நாடுகளும் நீண்டகால நன்மைகளை வழங்கக்கூடிய மூலோபாயத் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தத் தயாராக இருப்பதை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
மேலும், எரிசக்தி, நிதித் துறைகளில் உருவாகியுள்ள இந்த புதிய அத்தியாயம், மலேசியா-ஜப்பான் விரிவான மூலோபாய கூட்டுறவு தொடர்ந்து வலுவடைந்து வருவதற்கான உறுதியான சான்றாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னர், ஜப்பானுக்கான தனது உத்தியோகபூர்வ பயணத்தின் ஒரு பகுதியாக அன்வாருக்கு சிறப்பான அரச மரியாதை வழங்கப்பட்டது. ஜப்பான் பிரதமரின் அலுவலகத்திற்கு வருகை தந்த அவரைச் சனாய் தகாய்ச்சி வரவேற்றதுடன், இரு நாடுகளின் தேசிய கீதங்கள் ஒலிக்க மரியாதைக் காவலர் அணிவகுப்பும் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து, ஜப்பான் அமைச்சரவை அமைச்சர்கள், மூத்த அரசு அதிகாரிகளுடன் அன்வார் அறிமுகப்படுத்தப்பட்டதோடு, தம்முடன் வந்த மலேசிய பிரதிநிதிகள் குழுவினரையும் ஜப்பான் தரப்பிற்கு அறிமுகப்படுத்தினார்.
“நட்பைத் தாண்டி மூலோபாய கூட்டணியாக உயர்ந்த மலேசியா-ஜப்பான் உறவு, எரிசக்தி, நிதித் துறைகளில் புதிய வரலாற்றை எழுதத் தொடங்கியுள்ளது” என்பது இந்தப் பயணத்தின் முக்கியச் செய்தியாக அமைந்துள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 10, 2026, 4:26 pm
வீட்டு குளியலறையில் உயிரிழந்த நிலையில் மாது கண்டுபிடிக்கப்பட்டார்
June 10, 2026, 12:07 pm
காட்டை மறைவிடமாக்கிய சட்டவிரோத கும்பல் சிக்கியது: 5 பெண்கள் உட்பட 12 மியான்மர் நாட்டவர்கள் கைது
June 10, 2026, 10:55 am
இந்திய அரசியலில் வரலாற்று மைல்கல்: மோடியின் சாதனைக்கு அன்வார் வாழ்த்து
June 10, 2026, 9:49 am
சமூக நீதிக்கான ஐ.எல்.ஒ-வின் உலகளாவிய கூட்டணியில் இணைந்தது மலேசியா: டத்தோஸ்ரீ ரமணன்
June 10, 2026, 8:41 am
எதிரணிகள் பிளவுபட்டுள்ளதால் நம்பிக்கை கூட்டணி வலுவாக இல்லை: சைபுடின்
June 10, 2026, 8:38 am
