நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய அரசியலில் வரலாற்று மைல்கல்: மோடியின் சாதனைக்கு அன்வார் வாழ்த்து

கோலாலம்பூர்: 

இந்தியாவின் வரலாற்றில் மிக நீண்ட காலம் பதவி வகிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற மகத்தான சாதனையைப் படைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இன்று தனது பேஸ்புக் பதிவின் மூலம் வாழ்த்து தெரிவித்த அன்வார், இந்தியாவின் முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி, தேசிய செழிப்பு, உலக அரங்கில் அதன் செல்வாக்கை உயர்த்துவதில் மோடி வெளிப்படுத்திய நீண்டகால அர்ப்பணிப்பு மிக்க தலைமைத்துவத்தின் பிரதிபலிப்பே இந்த வரலாற்றுச் சாதனை எனக் குறிப்பிட்டார்.

"இந்தியாவின் மிக நீண்ட காலம் பதவி வகிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகள்," என்று அன்வார் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் முதல் இந்தியாவின் பிரதமராகப் பதவி வகித்து வரும் மோடி, தற்போது இந்திய அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளார்.

இந்தியாவுடனான மலேசியாவின் நீண்டகால, நெருக்கமான நட்புறவை மலேசியா பெரிதும் மதிப்பதாக தெரிவித்த அன்வார், இருநாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி, மக்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்க எதிர்நோக்கி இருப்பதாகவும் கூறினார்.

மேலும், "பிரதமர் மோடிக்கு தொடர்ந்த வெற்றியும், இந்திய மக்களுக்கு நிலையான அமைதி, முன்னேற்றம், வளமான எதிர்காலமும் கிடைக்க வாழ்த்துகிறேன்," என்று அன்வார் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset