செய்திகள் கலைகள்
"என்னால் எவ்வளவு காலம் முடியுமோ, அவ்வளவு காலம் இதில் நிலைத்திருப்பேன்": கார் பந்தயம் குறித்து அஜித்
துபாய்:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் சர்வதேச அளவில் கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார்.
அந்தவகையில் ஃபிரான்ஸில் நடந்த கார் பந்தயத்தில் பங்கேற்றிருந்தார். நேற்று நடந்த கார் பந்தயத்தில் 5 வது இடத்தை அஜித்குமாரின் அணி பிடித்திருந்தது.
இந்நிலையில் பந்தயத்திற்குப் பிறகு ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி கொடுத்த அஜித்குமார், " நான் தொடர்ந்து கார் பந்தயங்களில் பங்கேற்பேன். என்னால் எவ்வளவு காலம் முடியுமோ, அவ்வளவு காலம் இதில் நிலைத்திருப்பேன்.
ஒவ்வொரு ஆண்டும் கார் பந்தயத்தில் பங்கேற்க வேண்டும் என்பதே என் விருப்பம். கார் பந்தயத்தில் எனக்குள்ள ஈடுபாட்டின் காரணமாக, கடந்த 3 ஆண்டுகளாக நான் துபாயில் வசித்து வருகிறேன்.
ஆனால் என் குடும்பத்தினர் இந்தியாவில் இருக்கிறார்கள். பந்தயங்களில் நான் தொடர்ந்து பங்கேற்க வேண்டிய பொறுப்புகள் இருப்பதால், தற்போது பந்தயப் பயிற்சிகளுக்காக அதிக நேரத்தைச் செலவழித்து வருகிறேன்.
நாங்கள் இப்போது எங்களுடைய 2027-ஆம் ஆண்டிற்கான பந்தயத் திட்டத்தை தயார் செய்து கொண்டிருக்கிறோம்" என்று கூறியிருக்கிறார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 30, 2026, 3:27 pm
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் 140 கோடி ரூபாய் வசூல் சாதனை
September 30, 2026, 3:17 pm
வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் இடையிலான படம் கைவிடப்பட்டது: வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் பதிவு
September 25, 2026, 2:54 pm
டோரொத்தி திரைப்படத்திற்கு மலேசியாவில் தடை ? LGBTQ அம்சங்கள் உள்ளதால் தணிக்கை வாரியம் உத்தரவு
September 15, 2026, 11:38 am
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பார்வையில் வில்லன்கள்: திரைக்கதையின் உயிரோட்டம்
September 15, 2026, 11:29 am
ONDRA RENDA -25 YEARS OF GVM : GVM-இன் ஹீரோக்கள் – ஸ்டைலுக்கும் உணர்வுக்கும் ஒரு முகம்
September 14, 2026, 5:25 pm
பிக் பாஸ் தமிழில் முதலமைச்சர் விஜய்யை சீண்டினாரா நடிகர் விஜய் சேதுபதி ? சமூக ஊடகங்களில் வெடித்தது கலவரம்
September 10, 2026, 4:45 pm
