செய்திகள் உலகம்
H1-B விசா கட்டண உயர்வு ரத்து: ட்ரம்ப்புக்கு பின்னடைவு
வாஷிங்டன்:
அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நிர்வாகம் எச்-1பி விசாவுக்கு 1 லட்சம் டாலர் கட்டணம் என்ற அறிவிப்பை அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. இது ட்ரம்ப்புக்கு மற்றொரு பின்னடைவாக கருதப்படுகிறது.
அமெரிக்காவில் வெளிநாட்டினர் தற்காலிகமாக தங்கி வேலை செய்வதற்காக எச்-1பி விசா வழங்கப்படுகிறது. குறிப்பாக, தொழில்நுட்ப நிறுவனங்கள், ஐ.டி துறையில் திறமையான வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்த இந்த விசா பயன்படுகிறது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லியோ சொரோகின் அளித்த தீர்ப்பில், ‘அமெரிக்க பேரவையின் அனுமதியின்றி அதிபர் ட்ரம்ப், எச்-1பி விசா கட்டணத்தை உயர்த்தி உள்ளார். அவருக்கு அத்தகைய அதிகாரத்தை பேரவை வழங்கவில்லை. இதை இந்த வழக்கில் நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. அதனால் இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் அரசின் முடிவு சட்டவிரோதமானது என நீதிமன்றம் அறிவிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாத தகவலின் படி எச்-1பி விசாவுக்கான ஒரு லட்சம் டாலர் கட்டணத்தை 85 பேர் மட்டுமே செலுத்தி உள்ளனர்.
கடந்த நிதியாண்டில் 3.43 லட்சம் பேர் எச்-1பி விசா கேட்டு விண்ணப்பித்திருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை சுமார் 38 சதவீதம் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 12:02 pm
சிங்கப்பூர் பிரதமர் வோங் தேசிய தினக் கொண்டாட்டத்தில் வெளியிட்ட அறிவிப்புகள்
August 23, 2026, 1:02 pm
அமெரிக்காவிற்கு எதிராக கனடா கடும் வரிப்பிரகடனம்
August 23, 2026, 12:46 pm
சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த சரக்குக் கப்பல் கவிழ்ந்தது
August 22, 2026, 4:20 pm
பெற்றோர் அனுமதியின்றி சிறார் விவரங்கள் சேகரித்த TikTok: US$400 மில்லியன் இழப்பீடு தர ஒப்புதல்
August 22, 2026, 10:33 am
சுவீடன் பள்ளியில் பயங்கரம்: வாளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலி, மூவர் காயம்
August 22, 2026, 10:31 am
ஐரோப்பாவை உலுக்கிய கோடைக்கால வெப்ப அலை: 30,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
August 21, 2026, 9:45 pm
வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் தேர்வு
August 20, 2026, 2:50 pm
ஜப்பானில் அதிதீவிர கனமழை காரணமாக 13 பேர் பலி
August 20, 2026, 2:49 pm
