செய்திகள் இந்தியா
இந்திய அரசின் எஃகு ஆலையில் பயங்கர வெடிப்பு: 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு
ஹைதராபாத்:
தென்னிந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள அரசுக்குச் சொந்தமான எஃகு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் எட்டு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்ததுடன் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவம், விசாகப்பட்டினத்தில் உள்ள ராஷ்ட்ரிய இஸ்பாத் நிகாம் லிமிடெட் (RINL) எஃகு ஆலையில் திங்கட்கிழமை மாலை சுமார் 4.15 மணியளவில் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய எஃகு அமைச்சின் தகவலின்படி, சூடான கச்சா எஃகை வெளியேற்றுவதற்காக கதவுகள் திறக்கப்படுவதற்கு முன்பாகவே திடீரென பலத்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
வெடிப்பின் தாக்கத்தால் தீ ஜுவாலைகள் ஆலையின் கூரை வரை சீறிப்பாய்ந்ததாக அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, ஆலையில் இயங்கிக் கொண்டிருந்த தொங்கு கிரேன் ஒன்றும் தீப்பற்றி எரிந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 7.3 மில்லியன் டன் உற்பத்தித் திறன் கொண்ட இந்த எஃகு ஆலை, இந்தியாவின் முக்கிய அரசுடைமை தொழில்துறை நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.
குறிப்பாக, கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் RINL நிறுவனத்தின் நிதி, செயல்பாட்டு வலிமையை அதிகரிக்கும் நோக்கில், 114.4 பில்லியன் ரூபாய் மதிப்பிலான மீட்புத் திட்டத்திற்கு இந்திய அரசு ஒப்புதல் வழங்கியிருந்தது. இதில் 103 பில்லியன் ரூபாய் பங்கு மூலதன முதலீடும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
2030-க்குள் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘சுதேசி’ புல்லட் ரயில் தயாரிக்க இந்திய அரசு இலக்கு
September 16, 2026, 12:22 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வெள்ளம்: 20 பேர் மாண்டனர்
September 14, 2026, 11:27 pm
மே.வங்கத்தில் 252 மதரஸாக்கள் மூட மாநில பாஜக அரசு உத்தரவு: மேலும் 100 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
September 12, 2026, 10:40 pm
பிரிக்ஸ் விருந்தினர்களுக்கு பிஹாரின் பிரபல உணவு வகை
September 10, 2026, 1:02 pm
பிரிக்ஸ் மாநாடு: புதின், ஷி ஜின்பிங், அன்வார் இப்ராஹிம் பங்கேற்கின்றனா்
September 7, 2026, 9:32 pm
