செய்திகள் இந்தியா
ஆகஸ்ட் 1 முதல் திருப்பதி கோயில் குளத்தில் நீராடத் தடை விதிப்பு
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோயிலின் வடக்கே அமைந்துள்ள சுவாமி புஷ்கரணி எனும் குளம் உள்ளது. இந்தக் குளத்தில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை பக்தர்கள் நீராட திருப்பதி தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வருடாந்திர பிரம்மோற்சவம், அக்டோபர் மாதத்தில் நவராத்திரி பிரம்மோற்சவம் என இரண்டு பிரம்மோற்சவம் நடைபெற உள்ளன.
இதனையொட்டி, ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் கோயில் குளத்தில் பராமரிப்பு, சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
தொடர்ந்து, செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை குளத்தில் மீண்டும் தண்ணீர் நிரப்பும் பணிகள் நடைபெறும்.
எனவே, ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் செப்டம்பர் 10-ஆம் தேதி வரை பக்தர்கள் கோயில் குளத்தில் நீராட முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
2030-க்குள் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘சுதேசி’ புல்லட் ரயில் தயாரிக்க இந்திய அரசு இலக்கு
September 16, 2026, 12:22 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வெள்ளம்: 20 பேர் மாண்டனர்
September 14, 2026, 11:27 pm
மே.வங்கத்தில் 252 மதரஸாக்கள் மூட மாநில பாஜக அரசு உத்தரவு: மேலும் 100 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
September 12, 2026, 10:40 pm
பிரிக்ஸ் விருந்தினர்களுக்கு பிஹாரின் பிரபல உணவு வகை
September 10, 2026, 1:02 pm
பிரிக்ஸ் மாநாடு: புதின், ஷி ஜின்பிங், அன்வார் இப்ராஹிம் பங்கேற்கின்றனா்
September 7, 2026, 9:32 pm
