செய்திகள் இந்தியா
நீட் வினாத்தாள் கசிவு முதல்... அமைச்சர் ராஜினாமா வரை: இந்திய அரசை உலுக்கிய இளைஞர் படை
புதுடெல்லி:
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கரப்பான் பூச்சி கட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவில் முடிந்தது.
ஆம் ஆத்மி கட்சியின் தொண்டராக பணியாற்றி அமெரிக்காவில் முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் அபிஜித் திப்கே என்பவர் கடந்த மே மாதம் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) என்ற பெயரில் இணையதளத்தையும், சமூக வலைதளப் பக்கத்தையும் தொடங்கினார்.
இவர் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை கையில் எடுத்தார்.
இந்தப் போராட்டத்துக்கு எதிர்க்கட்சியினரும், மாணவர்களும் ஆதரவு அளித்ததால் இது மிகப் பெரிய போராட்டமாக மாறியது. இதையடுத்து கரப்பான் பூச்சி கட்சியினருடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது.
போராட்டத்தின் போது மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். இந்தியாவெங்கும் ஆளும் மோடி அரசு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. நீட் தேர்வுக்கு எதிராகவும் ஒன்றிய அரசுக்கு எதிராகவும் மாணவ மாணவிகள் விதம் விதமாக பாடல்களை பாடி யும் கருத்துக்களை காணொளிகளாக இணையத்தில் பகிர்ந்தும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இறுதியில் இந்திய அரசு பணிந்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
2030-க்குள் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘சுதேசி’ புல்லட் ரயில் தயாரிக்க இந்திய அரசு இலக்கு
September 16, 2026, 12:22 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வெள்ளம்: 20 பேர் மாண்டனர்
September 14, 2026, 11:27 pm
மே.வங்கத்தில் 252 மதரஸாக்கள் மூட மாநில பாஜக அரசு உத்தரவு: மேலும் 100 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
September 12, 2026, 10:40 pm
பிரிக்ஸ் விருந்தினர்களுக்கு பிஹாரின் பிரபல உணவு வகை
September 10, 2026, 1:02 pm
பிரிக்ஸ் மாநாடு: புதின், ஷி ஜின்பிங், அன்வார் இப்ராஹிம் பங்கேற்கின்றனா்
September 7, 2026, 9:32 pm
