செய்திகள் இந்தியா
ஒன்றிய கல்வி அமைச்சரை பதவியிலிருந்து நீக்க மறுக்கும் மோடி அரசை எதிர்த்து நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம்
புதுடெல்லி:
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவியிலிருந்து நீக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று தில்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்களும் தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ், சமாஜவாதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் எம்பிக்கள் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தர்மேந்திர பிரதானை பதவியிலிருந்து நீக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில், பகல் 12 மணி வரை இரு அவைகளின் நடவடிக்கைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
2030-க்குள் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘சுதேசி’ புல்லட் ரயில் தயாரிக்க இந்திய அரசு இலக்கு
September 16, 2026, 12:22 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வெள்ளம்: 20 பேர் மாண்டனர்
September 14, 2026, 11:27 pm
மே.வங்கத்தில் 252 மதரஸாக்கள் மூட மாநில பாஜக அரசு உத்தரவு: மேலும் 100 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
September 12, 2026, 10:40 pm
பிரிக்ஸ் விருந்தினர்களுக்கு பிஹாரின் பிரபல உணவு வகை
September 10, 2026, 1:02 pm
பிரிக்ஸ் மாநாடு: புதின், ஷி ஜின்பிங், அன்வார் இப்ராஹிம் பங்கேற்கின்றனா்
September 7, 2026, 9:32 pm
