செய்திகள் இந்தியா
மாணவர்கள் மீதான காவல்துறை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளி: இந்திய நாடாளுமன்றம் முடங்கியது
புதுடெல்லி:
இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளியால் தொடர்ந்து இரண்டாவது வாரத்தின் முதல் நாளும் அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம், மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா் அமளியில் ஈடுபட்டதால் கடந்த வாரம் முழுவதும் நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கின.
இந்த நிலையில், மாணவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், கடந்த சனிக்கிழமை பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார்.
தொடர்ந்து, வினாத்தாள் கசிவு உள்பட அரசுத் தோ்வு முறைகேடுகளுக்கு கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் மத்திய அரசு இன்று தாக்கல் செய்யவுள்ளது.
இந்த நிலையில், இரண்டாவது வாரத்தின் முதல் நாள் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியவுடன், சிஜேபி போராட்டத்தில் மாணவர்கள் மீதான காவல்துறை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, எதிர்க்கட்சி எம்பிக்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
2030-க்குள் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘சுதேசி’ புல்லட் ரயில் தயாரிக்க இந்திய அரசு இலக்கு
September 16, 2026, 12:22 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வெள்ளம்: 20 பேர் மாண்டனர்
September 14, 2026, 11:27 pm
மே.வங்கத்தில் 252 மதரஸாக்கள் மூட மாநில பாஜக அரசு உத்தரவு: மேலும் 100 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
September 12, 2026, 10:40 pm
பிரிக்ஸ் விருந்தினர்களுக்கு பிஹாரின் பிரபல உணவு வகை
September 10, 2026, 1:02 pm
பிரிக்ஸ் மாநாடு: புதின், ஷி ஜின்பிங், அன்வார் இப்ராஹிம் பங்கேற்கின்றனா்
September 7, 2026, 9:32 pm
