செய்திகள் இந்தியா
இந்தியாவில் செயலிவழி வேலைபெறும் வீட்டுப் பணிப்பெண்கள்
பெங்களூரு:
இந்தியாவில் வீட்டு வேலை செய்யும் பெண்கள் பலர் இப்போது செயலிவழி வேலைகளைத் தெரிவு செய்கின்றனர்.
இதற்காக Snabbit, Pronto, Urban Company போன்ற இணையத்தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
பொதுவாக இந்தியாவில் வாயளவில் அறிமுகம் ஆகும் ஒருவரை வீட்டு வேலைக்கு அழைப்பது வழக்கம்.
ஆனால் இப்போது செயலிவழி வேலை பதிவு செய்யப்படுகிறது.
அவர்களின் வேலைத் தரம் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் மதிப்பீடுகளின் அடிப்படையில் கண்காணிக்கப்படுகிறது.
உதாரணத்துக்கு, பெங்களூருவில் உள்ள Snabbit பயிற்சி நிலையத்தில் வீட்டு வேலைகளை விரைந்து செய்யப் பெண்களுக்குப் பயிற்சி தரப்படுகிறது.
நிறுவனத்தில் சேர்ந்த பிறகு சில பெண்கள் மாதத்துக்குச் சுமார் 45,000 ரூபாய் வரை வருமானம் பெறுகின்றனர்.
வழக்கமாகக் கிடைக்கும் வருமானத்தைவிட இது மூன்று மடங்கு அதிகம்; விழாக் காலங்களில் கூடுதல் வேலைகளும் கிடைக்கின்றன.
வேலை நேரத்தைத் தாங்களே நிர்ணயித்துக்கொள்ள முடியும் என்பதால் இது வசதியாக இருப்பதாக Snabbit நிறுவனம் கூறுகிறது.
மும்பை உள்ளிட்ட 10 நகரங்களில் நிறுவனம் இயங்குகிறது. 20,000 பதிவு செய்யப்பட்ட பணியாளர்கள் உள்ளனர். அவர்கள் தினமும் சராசரியாக 60,000 வேலைகள் செய்கின்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
2030-க்குள் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘சுதேசி’ புல்லட் ரயில் தயாரிக்க இந்திய அரசு இலக்கு
September 16, 2026, 12:22 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வெள்ளம்: 20 பேர் மாண்டனர்
September 14, 2026, 11:27 pm
மே.வங்கத்தில் 252 மதரஸாக்கள் மூட மாநில பாஜக அரசு உத்தரவு: மேலும் 100 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
September 12, 2026, 10:40 pm
பிரிக்ஸ் விருந்தினர்களுக்கு பிஹாரின் பிரபல உணவு வகை
September 10, 2026, 1:02 pm
பிரிக்ஸ் மாநாடு: புதின், ஷி ஜின்பிங், அன்வார் இப்ராஹிம் பங்கேற்கின்றனா்
September 7, 2026, 9:32 pm
