செய்திகள் இந்தியா
ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்காத சினிமா பிரபலங்கள் கோழைகள்: இணையவாசிகள் கடும் கோபம்
புதுடெல்லி:
இந்தியாவில் கரப்பான்பூச்சி ஜனதாக் கட்சி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் குறித்து மௌனம் காத்ததற்கு பாலிவுட் நட்சத்திரங்கள் உள்ளிட்ட பிரபலங்களைப் பலர் குறைகூறிவருகின்றனர்.
NEET மருத்துவத் தேர்வுத் தாள் கசிந்ததை அடுத்துத் தலைநகர் புதுடில்லியிலும் மற்ற இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.
ஆனால் அவற்றுக்கு ஆதரவு தெரிவிக்காமல் பிரபலங்கள் பலர் மௌனமாக இருந்தனர்.
அவர்களைப் பொதுமக்கள் பலர் "கோழைகள்" என்று கூறுகின்றனர்.

"அவர்கள் நடித்த படங்களை நாங்கள் தான் பார்த்தோம். எங்கள் ஆதரவின்றி அவர்களுக்குப் புகழும் செல்வமும் கிடைத்திருக்க மாட்டா. இப்போது எங்களுக்கு உதவி தேவைப்படும்போது அவர்கள் மௌனமாக இருக்கிறார்கள்," என்று சென்னையைச் சேர்ந்த ஒருவர் The Guardian ஊடகத்திடம் கூறினார்.
பிரகாஷ் ராஜ் மட்டுமே களத்திற்கு வந்தார். தொடர்ந்து மாணவர்களுக்கு குரலை கொடுத்தார். நஸீருத்தீன் ஷா, நடிகை ரேவதி ஆகியோர் கண்டனங்கள் தெரிவித்தனர்.
வேறுவழியின்றி மோடியின் நண்பர்களான சல்மான் கான், அனுபம் கெர் போன்ற பாலிவுட் நட்சத்திரங்கள் சிலர் ஆர்ப்பாட்டங்கள் குறித்துச் சமூக ஊடகங்களில் பட்டும்படாமலும் பதிவிட்டனர்.
ஆனால் அவர்கள் அரசாங்கத்தின் பிழைகளைப் பற்றி நேரடியாகப் பேசாததால் அதற்கும் பொதுமக்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
2030-க்குள் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘சுதேசி’ புல்லட் ரயில் தயாரிக்க இந்திய அரசு இலக்கு
September 16, 2026, 12:22 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வெள்ளம்: 20 பேர் மாண்டனர்
September 14, 2026, 11:27 pm
மே.வங்கத்தில் 252 மதரஸாக்கள் மூட மாநில பாஜக அரசு உத்தரவு: மேலும் 100 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
September 12, 2026, 10:40 pm
பிரிக்ஸ் விருந்தினர்களுக்கு பிஹாரின் பிரபல உணவு வகை
September 10, 2026, 1:02 pm
பிரிக்ஸ் மாநாடு: புதின், ஷி ஜின்பிங், அன்வார் இப்ராஹிம் பங்கேற்கின்றனா்
September 7, 2026, 9:32 pm
