செய்திகள் இந்தியா
இந்தியத் தலைநகரில் சிஜேபியினரின் மாபெரும் பேரணி: போராட்டக்காரர்களை கலைக்க தடியடி, கண்ணீர் புகை குண்டுவீசி தாக்கிய டெல்லி போலிசார்
புதுடெல்லி:
நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நேற்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றபோது அவர்களை கலைக்க போலிசார் தடியடி, கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதால் பதற்றம் நிலவியது.
நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கலந்துகொண்டு 21 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்ட நிலையில் அவர் வலுக் கட்டாயமாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில், நேற்று நாடாளுமன்றம் நோக்கி முற்றுகை போராட்டத்தை சிஜேபி கட்சியினர் தொடங்கினர். இதில், இளைஞர்கள், பெண்கள் என ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தப் போராட்டத்தின் போது டெல்லியில் பெரும் வன்முறை வெடித்தது. தடையை மீறிப் பேரணியாகச் செல்ல முயன்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியது வைரலாகி வருகிறது. கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைக்க போலிசார் முயன்றனர்.
இதனால், பெரும் பதற்றம் ஏற்பட்டதுடன் பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசலும் உண்டானது. பல இளைஞர்களையும் பெண்களையும் பெரிய தடிகள் கொண்டு போலிசார் தாக்கியது மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
2030-க்குள் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘சுதேசி’ புல்லட் ரயில் தயாரிக்க இந்திய அரசு இலக்கு
September 16, 2026, 12:22 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வெள்ளம்: 20 பேர் மாண்டனர்
September 14, 2026, 11:27 pm
மே.வங்கத்தில் 252 மதரஸாக்கள் மூட மாநில பாஜக அரசு உத்தரவு: மேலும் 100 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
September 12, 2026, 10:40 pm
பிரிக்ஸ் விருந்தினர்களுக்கு பிஹாரின் பிரபல உணவு வகை
September 10, 2026, 1:02 pm
பிரிக்ஸ் மாநாடு: புதின், ஷி ஜின்பிங், அன்வார் இப்ராஹிம் பங்கேற்கின்றனா்
September 7, 2026, 9:32 pm
