செய்திகள் விளையாட்டு
18 ஆண்டுகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி: ஸே ஃபே-இஸ்ஸுதீன் ஜோடிக்கு பிரதமர் அன்வார் பாராட்டு
கோலாலம்பூர்:
இந்தோனேசியா ஓபன் ஆடவர் இரட்டையர் பிரிவில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியாவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க பட்டத்தை வென்றுத் தந்த கோ ஸே ஃபே – நூர் இஸ்ஸுதீன் ரும்சானி ஜோடிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தேசிய இரட்டையர் ஜோடியின் இந்த வெற்றியை, உலக அரங்கில் மலேசியர்களின் திறமை, அர்ப்பணிப்பு, சாதனை மனப்பாங்கை வெளிப்படுத்தும் பெருமைமிக்க மைல்கல்லாக அன்வார் வர்ணித்தார்.
இந்த வெற்றி நாட்டின் பெருமையை உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், தங்கள் துறைகளில் மலேசிய விளையாட்டு வீரர்கள் வெளிப்படுத்தும் உயரிய அர்ப்பணிப்பையும் உறுதியையும் பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
“இந்தப் பெருமைக்குரிய சாதனை, மலேசியர்களின் திறன், அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. அவர்கள் தங்கள் துறைகளில் முன்னணியில் திகழ்வதுடன், சமூக முன்னேற்றத்திற்கும் உலகளாவிய வளர்ச்சிக்கும் பங்களித்து வருகின்றனர். வாழ்த்துகள்,” என அன்வார் தனது X சமூக ஊடகப் பதிவில் தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், உலகத் தரவரிசையில் எட்டாவது இடத்தில் உள்ள ஸே ஃபே – நூர் இஸ்ஸுதீன் ஜோடி, முதல் செட்டை இழந்த நிலையிலிருந்து அபாரமாக மீண்டு, இந்தோனேசியாவின் ரேமண்ட் இந்த்ரா – நிகோலாஸ் ஜோக்கின் ஜோடியை 13-21, 21-18, 21-10 என்ற செட் கணக்கில் 49 நிமிடங்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.
இதன் மூலம், 2008-ஆம் ஆண்டு ஜாக்ரி அப்துல் லத்தீஃப் – ஃபைருஸிசுவான் தசாரி ஜோடிக்குப் பிறகு, இந்தோனேசியா ஓபன் ஆடவர் இரட்டையர் பட்டத்தை வென்ற முதல் மலேசிய ஜோடி என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர்கள் படைத்துள்ளனர்.
இந்த வெற்றி, இந்தப் பருவத்தில் இந்தோனேசியா மாஸ்டர்ஸ் சாம்பியன் பட்டம், மலேசியா மாஸ்டர்ஸ் இரண்டாம் இட வெற்றியைத் தொடர்ந்து கிடைத்த மற்றொரு முக்கிய சாதனையாகும்.
ஜகார்த்தாவில் கிடைத்த இந்த மகுடம், ஸே ஃபே – நூர் இஸ்ஸுதீன் ஜோடியை உலகின் மிகவும் நிலைத்தன்மையுடன் விளையாடும் முன்னணி ஆடவர் இரட்டையர் அணிகளில் ஒன்றாக மேலும் வலுப்படுத்தியதுடன், சர்வதேச பூப்பந்து அரங்கில் உலகின் தலைசிறந்த ஜோடிகளை வீழ்த்தும் அவர்களின் திறனையும் மீண்டும் நிரூபித்துள்ளது.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 8, 2026, 8:47 am
ஆயிரம் கேள்விகளுக்கு மத்தியில் உலகக் கிண்ண போட்டிக்கு ஈரான் அணி வருகை
June 8, 2026, 8:43 am
இங்கிலாந்து அணி பயிற்சி முகாம் அருகே துப்பாக்கிச் சூடு: ஒன்பது பேர் காயம்
June 7, 2026, 12:06 pm
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: பிரேசில், அர்ஜெண்டினா வெற்றி
June 7, 2026, 12:00 pm
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: போர்த்துகல் வெற்றி
June 6, 2026, 6:24 pm
2026 உலகக்கோப்பை முழுவதையும் ரசிக்க ரசிகர்களுக்கு Unifi TV அதிரடி சலுகை
June 6, 2026, 5:46 pm
மின்னல் வேகத்தில் பாய்ந்த உமார்: 400 மீட்டரில் புதிய மலேசிய தேசிய சாதனை
June 6, 2026, 11:10 am
