செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து அணி பயிற்சி முகாம் அருகே துப்பாக்கிச் சூடு: ஒன்பது பேர் காயம்
கேன்சஸ்:
இங்கிலாந்து அணியின் 2026 உலகக் கிண்ண பயிற்சி முகாம் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை, மிசோரி மாநிலத்தின் கேன்சஸ் சிட்டியில் நிகழ்ந்தது.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உயிருக்கு ஆபத்தில்லாத காயங்கள் ஏற்பட்டது.
அவர்களில் குறைந்தது மூன்று பேர் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கேன்சஸ் சிட்டி போலிஸ் தெரிவித்துள்ளது.
உலகக் கிண்ண பயணம் முழுவதும் இங்கிலாந்து அணியின் பயிற்சி மையமாக இருக்கப்போகும் ஸ்வோப் கால்பந்து கிராமத்திலிருந்து சுமார் 6.4 கிலோமீட்டர் தொலைவில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பாக, அதிகாரிகள் தரப்பில் இதுவரை எந்த சந்தேக நபர்களும் கைது செய்யப்படவில்லை.
இருப்பினும், இங்கிலாந்து அணி இன்னும் கேன்சஸ் சிட்டிக்கு வந்து சேரவில்லை.
மேலும், தனது உலகக் கிண்ண பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு, புதன்கிழமை அன்று புளோரிடாவின் ஆர்லாண்டோவில் கோஸ்டா ரிகாவுக்கு எதிராக தனது இறுதி நட்பு ஆட்டத்தில் விளையாடத் திட்டமிடப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 8, 2026, 8:47 am
ஆயிரம் கேள்விகளுக்கு மத்தியில் உலகக் கிண்ண போட்டிக்கு ஈரான் அணி வருகை
June 7, 2026, 12:06 pm
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: பிரேசில், அர்ஜெண்டினா வெற்றி
June 7, 2026, 12:00 pm
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: போர்த்துகல் வெற்றி
June 6, 2026, 6:24 pm
2026 உலகக்கோப்பை முழுவதையும் ரசிக்க ரசிகர்களுக்கு Unifi TV அதிரடி சலுகை
June 6, 2026, 5:46 pm
மின்னல் வேகத்தில் பாய்ந்த உமார்: 400 மீட்டரில் புதிய மலேசிய தேசிய சாதனை
June 6, 2026, 11:10 am
லா லீகாவின் ஆண்டின் சிறந்த வீரராக லெமானில் யமால் தேர்ந்தெடுக்கப்பட்டார்
June 6, 2026, 11:09 am
