செய்திகள் இந்தியா
மத்திய பிரதேசத்தில் ரூ.80,000 ஊதியம் பெற்று வந்துள்ள 14 போலி மருத்துவர்கள்
போபால்:
மத்திய பிரதேச அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தமோ நகரில் செயல்படும் சஞ்சீவினி மருத்துவமனையில் போலி மருத்துவர்கள் பணியாற்றி வருவதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக மத்திய பிரதேச சுகாதாரத் துறை மற்றும் காவல் துறை இணைந்து தமோ பகுதி சஞ்சீவனி மருத்துவமனைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
முதல்கட்ட விசாரணையில் 10 மாவட்டங்களை சேர்ந்த சஞ்சீவனி மருத்துவமனைகளில் 14 போலி மருத்துவர்கள் பணியாற்றுவது கண்டறியப்பட்டு உள்ளது.
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களாக பணியாற்றிய குமார் சச்சின் யாதவ், ராஜ்பால் கவுர், அஜய்மவுரியா ஆகியோர் போலி மருத்துவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட் டனர்.
இதுகுறித்து சுகாதாரத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: கைதான போலி மருத்துவர்கள் ரூ.10 லட்சம் கொடுத்து போலி எம்பிபிஎஸ் சான்றிதழை பெற்று உள்ளனர். 3 போலி மருத்துவர்களும் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக அரசு மருத்துவர்களாக பணியாற்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து உள்ளனர்.
தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மத்திய பிரதேச அரசு சார்பில் மாநிலம் முழுவதும் 783 சஞ்சீவினி மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. சஞ்சீவினி மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் 2,000-க் கும் மேற்பட்ட மருத்துவர்கள் உள்ளனர். அவர்களுக்கு மாதம் ரூ.80,000 ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
தமோ பகுதியைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் சஞ்சீவினி மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
அவர்களில் சிலர் பணியில் இருந்து திடீரென ராஜினாமா செய்துள்ளனர். சிலர் பணிக்கு வரவில்லை. 14 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் மாநிலம் முழுவதும் 80 மருத்துவர்களின் எம்பிபிஎஸ் சான்றிதழ்கள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன. இவ்வாறு மத்திய பிரதேச சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
2030-க்குள் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘சுதேசி’ புல்லட் ரயில் தயாரிக்க இந்திய அரசு இலக்கு
September 16, 2026, 12:22 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வெள்ளம்: 20 பேர் மாண்டனர்
September 14, 2026, 11:27 pm
மே.வங்கத்தில் 252 மதரஸாக்கள் மூட மாநில பாஜக அரசு உத்தரவு: மேலும் 100 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
September 12, 2026, 10:40 pm
பிரிக்ஸ் விருந்தினர்களுக்கு பிஹாரின் பிரபல உணவு வகை
September 10, 2026, 1:02 pm
பிரிக்ஸ் மாநாடு: புதின், ஷி ஜின்பிங், அன்வார் இப்ராஹிம் பங்கேற்கின்றனா்
September 7, 2026, 9:32 pm
