செய்திகள் கலைகள்
பி.எஸ்.எஃப் வீரர்களைக் கவுரவிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி
அட்டாரி:
எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் தியாகத்தைக் கவுரவிக்கும் வகையில் அட்டாரி எல்லையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இம்தியாஸ் அலி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தி திரைப்படம் ‘மைன் வாபஸ் ஆவுங்கா’. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இது ஜூன் 12ம் தேதி வெளியாகிறது.
இப்பட வெளியீட்டை முன்னிட்டு, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் தியாகத்தைக் கவுரவிக்கும் வகையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பஞ்சாப் மாநிலம் அட்டாரி எல்லையில் நேற்று மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை இந்த இசைநிகழ்ச்சி நடைபெற்றது.
‘ஜெய் ஹோ - ஏ ட்ரிபியூட் டு தி பிரேவ்ஹார்ட்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாப்பதில் படையினர் காட்டும் துணிச்சல், தியாகம், அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவற்றுக்கான நன்றியையும் ஆழ்ந்த மரியாதையையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது.
இந்நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இம்தியாஸ் அலி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 30, 2026, 3:27 pm
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் 140 கோடி ரூபாய் வசூல் சாதனை
September 30, 2026, 3:17 pm
வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் இடையிலான படம் கைவிடப்பட்டது: வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் பதிவு
September 25, 2026, 2:54 pm
டோரொத்தி திரைப்படத்திற்கு மலேசியாவில் தடை ? LGBTQ அம்சங்கள் உள்ளதால் தணிக்கை வாரியம் உத்தரவு
September 15, 2026, 11:38 am
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் பார்வையில் வில்லன்கள்: திரைக்கதையின் உயிரோட்டம்
September 15, 2026, 11:29 am
ONDRA RENDA -25 YEARS OF GVM : GVM-இன் ஹீரோக்கள் – ஸ்டைலுக்கும் உணர்வுக்கும் ஒரு முகம்
September 14, 2026, 5:25 pm
பிக் பாஸ் தமிழில் முதலமைச்சர் விஜய்யை சீண்டினாரா நடிகர் விஜய் சேதுபதி ? சமூக ஊடகங்களில் வெடித்தது கலவரம்
September 10, 2026, 4:45 pm
