செய்திகள் கலைகள்
கானக் குயிலே காலமானாயா? - கவிதாஞ்சலி
கானக் குயிலே
காலமானாயா?
அரைநூற்றாண்டு
ஆறுதலே
அடங்கிவிட்டாயா?
‘சிங்கார வேலனே தேவா’வில்
நாதஸ்வரத்தை வென்றுகாட்டிய
கீதவாணியே
முடிந்துவிட்டதா உன் மூச்சு?
தாய்மையாய் தமிழாய்
காதலாய் கருணையாய்
கண்ணீராய் புன்னகையாய்
எங்கள் வாழ்வோடு கலந்த
பாட்டரசி
உனக்கும் மரணமா?
‘நாதம் என் ஜீவனே’ என்றாயே
உன் நாதம் இருக்கிறது
ஜீவன் இல்லையே
சிரித்த முகமும்
சிவப்பு நிலாப் பொட்டும்
ஆடாமல் அசையாமல்
சித்திரம் பாடுவதுபோல்
செவ்வாய் அசைக்கும் அழகும்
கண்களை விட்டுக்
காணாமல் போகுமோ!
நீ
பாடமுடியாத பாடலென்று
எதுவும் இல்லை
உன் பாடல் கேளாமல்
இரவுகள் விடிவதில்லை
கண்ணதாசன் எழுதி
நீ பாடிய பல்லவி கொண்டே
புகழ்வணக்கம் செலுத்துகிறேன்
‘தூக்கம் உன் கண்களைத்
தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில்
நிலவட்டுமே
அந்தத்
தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னைத்
தொடர்ந்திருப்பேன்
என்றும்
துணையிருப்பேன்’
வாழ்க நீ அம்மா!
- கவிப்பேரரசு வைரமுத்து
தொடர்புடைய செய்திகள்
August 8, 2026, 1:45 pm
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்து வெளிவந்துள்ள DC திரைப்படம்: அனிருத் இசை சம்பவம்
August 6, 2026, 4:59 pm
புதுச்சேரியில் 3ஆவது உலகத் திரைப்பட விழா: 10 நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்படும்
August 6, 2026, 4:48 pm
ஜோஜூ ஜார்ஜ், ஊர்வசி நடிப்பில் உருவான ஆஷா திரைப்படம் செப்டம்பர் 4இல் வெளியாகிறது
August 5, 2026, 7:16 am
கஜினி, வீரம் படத்தில் நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் காலமானார்
July 30, 2026, 10:47 am
44 வயதில் தான் உங்களுக்கான வாழ்வு தொடங்குகிறது: ஓப்ராவின் அறிவுரைக்கு ஆமென் என பதிவிட்ட த்ரிஷா
July 28, 2026, 5:47 pm
