செய்திகள் உலகம்
பிலிப்பைன்ஸை புரட்டிப்போட்ட நிலநடுக்கம்: கட்டிடங்கள் சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி
மணிலா:
பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியை இன்று அதிகாலை தாக்கிய நிலநடுக்கத்தில் குறைந்தது ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.
7.8 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம், பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல கட்டிடங்கள், வீடுகள் இடிந்து விழ வழிவகுத்ததாக போலிஸார் தெரிவித்தனர்.
அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல், மீட்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், சேதமடைந்த கட்டிடங்களின் மொத்த எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
ஜெனரல் சாண்டோஸ் நகர காவல்துறையைச் சேர்ந்த சார்ஜென்ட் மேஜர் ராபர்ட் டகோன், நிலநடுக்கத்தின் தாக்கத்தால் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதுடன், சில கட்டமைப்புகள் முழுமையாக இடிந்து விழுந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் நபர்களை மீட்பதில் மீட்புப் படையினர் முழு கவனத்தையும் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
தெற்கு பிலிப்பைன்ஸ் முழுவதும் ஏற்பட்டுள்ள சேதத்தின் அளவை அதிகாரிகள் தொடர்ந்து மதிப்பிட்டு வருவதுடன், நிலைமையையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.
இதற்கிடையில், சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் (CENC) வெளியிட்ட தகவலின்படி, 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று காலை 7.37 மணியளவில் பிலிப்பைன்ஸ் தீவுக்கூட்டத்தின் தெற்குப் பகுதியில் பதிவானது.
நிலநடுக்கத்தின் மையப்பகுதி 40 கிலோமீட்டர் ஆழத்தில், 5.55 டிகிரி வடக்கு அட்சரேகை, 125.1 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிண்டனாவோ தீவின் தெற்குப் பகுதிக்கு அருகில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், சுற்றியுள்ள பல பகுதிகளிலும் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தின் தாக்கம், சுனாமி அபாயம், கடலோரப் பகுதிகளில் ஏற்படக்கூடிய விளைவுகள் தொடர்பாக அண்டை நாடுகளின் நிலநடுக்க கண்காணிப்பு அமைப்புகளும் தொடர்ந்து மதிப்பீடு செய்து வருகின்றன.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 12:02 pm
சிங்கப்பூர் பிரதமர் வோங் தேசிய தினக் கொண்டாட்டத்தில் வெளியிட்ட அறிவிப்புகள்
August 23, 2026, 1:02 pm
அமெரிக்காவிற்கு எதிராக கனடா கடும் வரிப்பிரகடனம்
August 23, 2026, 12:46 pm
சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த சரக்குக் கப்பல் கவிழ்ந்தது
August 22, 2026, 4:20 pm
பெற்றோர் அனுமதியின்றி சிறார் விவரங்கள் சேகரித்த TikTok: US$400 மில்லியன் இழப்பீடு தர ஒப்புதல்
August 22, 2026, 10:33 am
சுவீடன் பள்ளியில் பயங்கரம்: வாளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலி, மூவர் காயம்
August 22, 2026, 10:31 am
ஐரோப்பாவை உலுக்கிய கோடைக்கால வெப்ப அலை: 30,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
August 21, 2026, 9:45 pm
வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் தேர்வு
August 20, 2026, 2:50 pm
ஜப்பானில் அதிதீவிர கனமழை காரணமாக 13 பேர் பலி
August 20, 2026, 2:49 pm
