நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கியூபாவிற்கான தனது சேவைகளைக் காலவரையின்றி நிறுத்துகிறது ஏர் கனடா விமான நிறுவனம் 

வான்கூவர்:

Air Canada விமான நிறுவனம் கியூபாவிற்கு (Cuba) தனது சேவைகளைக் காலவரையின்றி நிறுத்துவதாகத் தெரிவித்துள்ளது.

கியூபாவின் நிச்சயமற்ற அரசியல், பொருளாதார சூழல் காரணமாக அந்த முடிவை எடுத்ததாக அது கூறியது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கியூபா மீது நெருக்குலை அதிகரித்து வரும் நிலையில் Air Canada அவ்வாறு முடிவெடுத்துள்ளது.

நவம்பர் வரை கியூபாவிற்கு விமானச் சேவைகளை நிறுத்துவதாகக் கனடாவின் தேசிய விமான நிறுவனம் பிப்ரவரியில் அறிவித்திருந்தது.

கியூபாவின் சுற்றுலாத் துறையில் கனடியர்கள் முக்கியப் பங்கு வகித்து வந்தனர்.

ஆனால் வாஷிங்டன் எரிபொருள் விநியோகத்தை நிறுத்தியதோடு தீவின் மீது படையெடுக்கப் போவதாக மிரட்டியதிலிருந்து கியூபாவின் சுற்றுலா வருவாய் குறைந்துள்ளது.

கடந்த வாரம் கனடாவின் Blue Diamond Resorts நிறுவனம் கியூபாவில் உள்ள தனது 62 சொத்துகளை மூடுவதாக அறிவித்தது.

ஜனவரி முதல் எரிபொருள் தடையினால் கியூபாவில் அன்றாடம் 22 மணி நேரம் வரை மின்தடை ஏற்படுகிறது. குழாய் நீர்ப் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து முடங்கியதால் உணவு, மருந்துக்கும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை.

மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகளிலிருந்து வரும் உதவிப் பொருள்களையே நம்பியுள்ளது கியூபா.

ஆதாரம்: AFP

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset