செய்திகள் இந்தியா
கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி பதவி விலகலை திரும்பப்பெறுகிறார்: முதல்வர் டி.கே.சிவகுமார் அறிவிப்பு
பெங்களூரு:
கர்நாடக முதல்வராக டி.கே.சிவகுமார் கடந்த 3-ஆம் தேதி பதவியேற்றார். அவருடன் துணை முதல்வர் உட்பட 12 அமைச்சர்கள் பதவியேற்றனர்.
இதில் மூத்த அமைச்சர் ராமலிங்க ரெட்டிக்கு நீர்வளத் துறை ஒதுக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த ராமலிங்க ரெட்டி நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். பதவியேற்ற 2-ஆவது நாளிலே மூத்த அமைச்சர் ராஜினாமா செய்ததால் முதல்வருக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இதையடுத்து முதல்வர் டி.கே. சிவகுமார், அவருடன் 2 முறை தொலைபேசியில் பேசிய அவர், உடனடியாக ராஜினாமா கடிதத்தைத் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தினார்.
முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் ராமலிங்க ரெட்டியிடம் இதுகுறித்து பேசினார். இதைத் தொடர்ந்து கர்நாடக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா ஒரு மணி நேரம் ஆலோசித்தார்.
இந்நிலையில் முதல்வர் டி.கே.சிவகுமார் நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘ராமலிங்க ரெட்டி என் நண்பர். அவரது பிரச்சினை பேசி முடித்தாகி விட்டது. அவர் எனக்கு வாட்ஸ் அப்பில் தான் ராஜினாமா கடிதம் அனுப்பினார். அதனை திரும்ப பெறுவதாக கூறிவிட்டார். எனவே அதை பெரிதுபடுத்த வேண்டாம். புதிய கதைகளை உருவாக்கி அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டாம்’’ என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
2030-க்குள் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘சுதேசி’ புல்லட் ரயில் தயாரிக்க இந்திய அரசு இலக்கு
September 16, 2026, 12:22 pm
இந்தியாவின் வட மாநிலங்களில் கடும் வெள்ளம்: 20 பேர் மாண்டனர்
September 14, 2026, 11:27 pm
மே.வங்கத்தில் 252 மதரஸாக்கள் மூட மாநில பாஜக அரசு உத்தரவு: மேலும் 100 கல்வி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
September 12, 2026, 10:40 pm
பிரிக்ஸ் விருந்தினர்களுக்கு பிஹாரின் பிரபல உணவு வகை
September 10, 2026, 1:02 pm
பிரிக்ஸ் மாநாடு: புதின், ஷி ஜின்பிங், அன்வார் இப்ராஹிம் பங்கேற்கின்றனா்
September 7, 2026, 9:32 pm
