செய்திகள் இந்தியா
லண்டனில் இந்திய தலைமை நீதிபதி பங்கேற்ற நிகழ்ச்சியில் கரப்பான் பூச்சி குறித்து கேள்வி எழுப்பிய பார்வையாளர்கள்: தடுமாறி தவித்த நீதிபதி
லண்டன்:
லண்டனில் இந்திய தலைமை நீதிபதி பங்கேற்ற நிகழ்ச்சியில் ஒரு சிலர் கரப்பான் பூச்சி குறித்து கேள்வி எழுப்பி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.
லண்டன் பல்கலைக்கழகத்தின் பிர்க்பெக் கல்லூரியில் கடந்த ஜூன் 4ஆம் தேதியன்று ‘செயற்கை நுண்ணறிவும் சர்வதேச சட்டமும்’ என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
இதில் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த் பங்கேற்று உரையாற்றினார். இந்தியாவில் நிலவும் ஜனநாயக முறை, சட்டத்தின் மாண்புகள் குறித்து அவர் ஆற்றிய உரையைத் தொடர்ந்து, பார்வையாளர்களுடன் கலந்துரையாடும் பகுதி தொடங்கியது.
அப்போது அங்கிருந்த சிலர் இந்திய நீதிபதியின் உரைக்கு எதிராக கேள்விகளை எழுப்பத் தொடங்கினர்.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், பெண் ஒருவர் இந்தியாவில் மாற்றுக் கருத்து தெரிவிப்பவர்கள் ஒடுக்கப்படுவதாகக் கூறி, நீதிபதி ஏற்கனவே கூறியதாகச் சொல்லப்படும் ‘கரப்பான் பூச்சி’ குறித்த கருத்தை முன்வைத்து கேள்வி எழுப்ப முயன்றார்.
நீதிபதி திகைப்படைந்தார். அவரால் என்ன சொல்வதென்று தெரியாமல் தடுமாறினார்.
அப்போது குறுக்கிட்ட நெறியாளர், செயற்கை நுண்ணறிவு தொடர்பான விவாதத்தில் அரசியல் ரீதியான கேள்விகளை தவிர்க்குமாறு கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த பார்வையாளர்கள் ‘எங்களுக்கு உரிய மரியாதையை வழங்குங்கள்’ என்று உரக்கக் கத்தி ரகளையில் ஈடுபட்டனர்.
இதற்கு இந்தியத் தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 11:56 am
மட்டன் பிரியாணி போடாமல் சிக்கன் பரிமாறியதால் மோதல்: பிஹார் திருமணத்தில் 12 பேர் காயம்
July 11, 2026, 7:20 pm
ஆல்கஹால் கலந்த இருமல் மருந்துகளுக்கு புதிய கட்டுப்பாடு: இந்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு
July 11, 2026, 1:29 pm
அமர்நாத் குகைக் கோயில் பனிலிங்கம் சுமார் 90 சதவீதம் வரை உருகி ஓடுகிறது
July 9, 2026, 10:42 am
பயணத்தோடு ஒரு தேனிலவு: முதல் இரவு அறைபோல் மாற்றப்பட்ட ரயில் பயணப் பெட்டி
July 8, 2026, 3:28 pm
மும்பையில் கனமழை; 1,100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன: விமான சேவைகள் பாதிப்பு
July 8, 2026, 7:26 am
வய நாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்: இன்றும் கன மழைக்கு வாய்ப்பு
July 7, 2026, 12:55 pm
இந்தோனேசியாவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு
July 4, 2026, 5:32 pm
