செய்திகள் மலேசியா
15 நாட்கள் மர்மமாக மாயம்: இறுதியில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட ஜாஸ்லிண்டா
கோலாலம்பூர்:
பேராக் மாநிலம், ஈப்போவில் உள்ள கூனோங் பாத்து பூத்திஹ் மலையேற்றப் பகுதியில் கடந்த 15 நாட்களாக காணாமல் போயிருந்த பெண் மலையேற்ற வீராங்கனை ஜாஸ்லிண்டா சாலுடின் (49) இன்று மாலை பத்திரமாகக் கண்டுபிடிக்கப்பட்டார்.
உள்நாட்டு மக்களின் தன்னார்வ ஒருங்கிணைப்பாளர் சூ ஹோ பெங் தெரிவித்ததன்படி, ஜாஸ்லிண்டா லுபுக் பாரு ஓராங் அஸ்லி கிராமப் பகுதியில் கிராம மக்களால் கண்டுபிடிக்கப்பட்டார்.
பகிரப்பட்ட புகைப்படங்களில், ஜாஸ்லிண்டா ஆரோக்கியமான நிலையில் காணப்பட்டதுடன், ஓராங் அஸ்லி மக்களின் குடிலில் அமர்ந்து சாப்பிடும் காட்சியும் பதிவாகியுள்ளது.
இதனிடையே, பேராக் தீயணைப்பு, மீட்புத் துறையின் செயல்பாட்டு பிரிவு உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அஹ்மத், ஜாஸ்லிண்டா மீட்கப்பட்ட தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், அவரது உடல்நிலை, மீட்பு நடவடிக்கை குறித்த மேலதிக விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
கடந்த மே 23ஆம் தேதி அதிகாலை, 13 மலையேற்ற வீரர்கள், இரண்டு வழிகாட்டிகளுடன் இணைந்து டிரான்ஸ் ஸ்பென்சர் சாப்மேன் மலையேற்றப் பயணத்தை ஜாஸ்லிண்டா தொடங்கியிருந்தார்.
இந்த நிலையில், 15 நாட்களாக நீடித்த தேடுதல் முயற்சிகளுக்குப் பிறகு அவர் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது குடும்பத்தினருக்கும் மீட்புக் குழுக்களுக்கும் பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
July 26, 2026, 2:40 pm
பேராக்கில் ஆலயங்களை அகற்ற இடமாற்றம் செய்ய என்னுடைய அனுமதி வேண்டும்: டத்தோ சிவநேசன்
July 26, 2026, 10:52 am
மலேசியர்கள் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி காணப்படும்: பிரதமர் அன்வார் உறுதி
July 26, 2026, 10:44 am
