செய்திகள் உலகம்
கியூபா அதிபருக்கு அமெரிக்காவின் அதிரடி தடை: சர்வதேச அரசியலில் புதிய பரபரப்பு
நியூயார்க்:
கியூபா மீதான அழுத்தத்தை மேலும் தீவிரப்படுத்தும் நடவடிக்கையாக, அமெரிக்கா கியூபா ஜனாதிபதி மிகுவல் டியாஸ்-கனெல் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்த நடவடிக்கை சர்வதேச அரசியல் வட்டாரங்களில் புதிய கவனத்தை ஈர்த்துள்ளது.
அமெரிக்க நிதித்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, 66 வயதான டியாஸ்-கனெல், மேலும் நான்கு நபர்கள், கியூபாவின் புரட்சிகர ஆயுதப்படை அமைச்சு உட்பட ஐந்து நிறுவனங்கள், அமெரிக்காவின் ‘Specially Designated Nationals (SDN)’ பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
2018 ஆம் ஆண்டு, ரவுல் காஸ்ட்ரோவிடமிருந்து நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்ற டியாஸ்-கனெல், தற்போது அமெரிக்காவின் புதிய தடைகளின் மையப்புள்ளியாக மாறியுள்ளார்.
இதற்கு முன்னர், கடந்த மே மாதத்திலும் அமெரிக்கா 11 கியூப அதிகாரிகள் மீது தடைகளை விதித்திருந்ததுடன், 1996ஆம் ஆண்டு கியூப அகதிகள் தொடர்பான சம்பவத்தை முன்வைத்து ரவுல் காஸ்ட்ரோவையும் குற்றஞ்சாட்டியிருந்தது.
கியூபா-அமெரிக்க உறவில் மீண்டும் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்தப் புதிய பொருளாதாரத் தடை இரு நாடுகளுக்கிடையேயான அரசியல் மோதலை மேலும் தீவிரப்படுத்தும் என சர்வதேச ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
July 27, 2026, 11:18 am
தென்கொரியாவில் நடந்த சண்டையில் மலேசிய நாட்டவர் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணம்
July 27, 2026, 11:17 am
கழிவறை கிண்ணத்தில் நிரப்பப்பட்ட சோடா பானத்தை விரைந்து குடிக்கும் போட்டி: பொதுமக்கள் கண்டனம்
July 26, 2026, 4:44 pm
கடுமையான காட்டுத்தீ: பிரான்ஸும் ஸ்பெயினும் திணறுகின்றன
July 26, 2026, 10:58 am
இந்தோனேசியாவில் 70 கிலோ தங்கத்துடன் முன்னாள் ஊழல் ஒழிப்பு அதிகாரி கைது
July 24, 2026, 4:46 pm
அமெரிக்காவின் புதிய வரி விதிப்புக்குச் சீனா கடும் கண்டனம்
July 24, 2026, 3:05 pm
செங்கடலில் 2 சவூதி அரேபிய எண்ணெய் கப்பல்கள் மீது ஹூதி போராட்டவாதிகள் தாக்குதல்
July 23, 2026, 12:56 pm
ஆய்வறிக்கை விளக்கக் கூட்டத்தில் பாம்புடன் கூட்டத்தை நடத்திய பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்
July 23, 2026, 11:22 am
குடிபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் இரு சுவிஸ் நாட்டு விமானிகள் பணி இடைநீக்கம்
July 23, 2026, 10:04 am
