செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண போட்டியில் அபாயகரமான வீரராக ரொனால்டோ திகழ்வார்: ரிகார்டோ பெரைரா
லிஸ்பன்:
இந்த உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் போர்த்துகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ எதிரணி வீரர்களை (கால்பந்து களத்தில்) துவம்சம் செய்யும் இயந்திரமாகவே திகழ்வார்.
அவர் களத்தில் இருக்கும் வரை, எதிரிகளுக்கு ஆபத்து எப்போதும் காத்திருக்கும் என்று என்று போர்சத்துகல் அணியின் முன்னாள் கோல்காவலர் ரிகார்டோ பெரைரா தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய 3 நாடுகளில் 2026ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை போட்டி வரும் 11ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் போர்த்துகல் நட்சத்திர வீரர் ரொனால்டோ, 7ஆவது முறையாக உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்கும் முதல் வீரர் என்ற பெருமையைப் பெறவுள்ளார்.
அர்ஜெண்டினா நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸிக்கும் இது 7ஆவது உலகக் கோப்பை போட்டியாகும்.
போர்த்துகல் சுகல் அணியின் கோல்காவலராக இருந்த ரிகார்டோ தற்போது பயிற்சியாளராக மாறி வீரர்களுக்கு பயிற்சியைத் தந்து வருகிறார்.
இந்நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறித்து, சக அணியின் முன்னாள் வீரர் ரிகார்டோ நேற்று கூறியதாவது:
நான் பார்த்த மிகச்சிறந்த கால்பந்து வீரர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் ஒருவர்.
அவர் களத்தில் இறங்கிவிட்டால் அழிக்கும் இயந்திரம் போன்று செயல்படுவார்.
அவர் களத்தில் இருந்தால் எதிரணி வீரர்களுக்கு ஆபத்துதான். இந்த உலகக் கோப்பை தொடரில் அவர் அபாயகரமான வீரராக திகழ்வார் என்பதில் சந்தேகமில்லை என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 11:33 am
உலகக் கிண்ணத்தில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணியின் வீரர் ஜேய்டன் ஏடம்ஸ் மரணம்
July 12, 2026, 9:32 am
நார்வே பெருமை கொள்ளலாம்: ஒடாகார்ட்
July 12, 2026, 9:31 am
உலகக் கிண்ணம்: நார்வேவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து
July 11, 2026, 8:29 am
லியோனல் மெஸ்ஸிக்கு சிறப்பு மரியாதை
July 11, 2026, 8:29 am
உலகக் கிண்ணம்: கடைசி நிமிட கோலால் ஸ்பெயின் திரில் வெற்றி
July 10, 2026, 9:00 am
எர்லிங் ஹாலண்ட் இங்கிலாந்து அணிக்கான உண்மையான அழுத்தம்
July 10, 2026, 8:58 am
உலகக் கிண்ணம்: எம்பாப்பேவின் அதிரடி ஆட்டத்தினால் அரையிறுதியில் பிரான்ஸ்
July 9, 2026, 11:57 am
FIFA உலகக் கிண்ண காலிறுதி சுற்று ஆட்டம்: பிரான்ஸ், மொரொக்கோ அணிகள் மோதல்
July 9, 2026, 10:42 am
