நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: போர்த்துகல், இங்கிலாந்து வெற்றி

லிஸ்பன்:

அனைத்துலக நட்புமுறை கால்பந்து போட்டியில் போர்த்துகல், இங்கிலாந்து அணிகள் வெற்றி பெற்றனர்.

டாக்டர் மாகல்ஹேஸ் பெசோவா அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் போர்த்துகல் அணியினர் நைஜீரியா அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போர்த்துகல் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் நைஜீரியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

போர்த்துகல் அணியின் வெற்றி கோல்களை பெட்ரோ நேதோ, பிரான்சிஸ்கோ கோன்சாலோ ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் கோஸ்தா ரிகா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இங்கிலாந்து அணியின் வெற்றி கோல்களை டெக்லான் ரைஸ், அந்தோனி கார்டோன், ஓலி வாட்கின்ஸ் ஆகியோர் அடித்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset