செய்திகள் உலகம்
புறப்படுவதற்கு முன் பரபரப்பு:.லுஃப்தான்சா ட்ரீம்லைனர் திடீரென சாய்ந்து விபத்து
பிராங்க்ஃபுர்ட்:
ஜெர்மனியின் பிராங்க்ஃபுர்ட் விமான நிலையத்தில், லாஸ் ஏஞ்சலஸுக்கு புறப்படத் தயாராக இருந்த லுஃப்தான்சா போயிங் 787-9 ட்ரீம்லைனர் விமானம் திடீரென மூக்குச் சாய்ந்து தரையில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமானம் நிறுத்தப்பட்டிருந்தபோது, அதன் முன்பகுதியின் தரையிறக்கச் சக்கரம் எதிர்பாராத விதமாக மடங்கியதால் விமானத்தின் முன்பகுதி தரையில் மோதி சரிந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தின் போது விமானத்திற்குள் பணியில் இருந்த விமானப் பணியாளர்கள், தரைப் பணியாளர்களில் சிலர் காயமடைந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக, பயணிகள் யாரும் இன்னும் விமானத்தில் ஏறாததால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ள காட்சிகளில், விமானத்தின் முன்சக்கரம் முறிந்த நிலையில், விமானம் தரையில் சாய்ந்து நிற்பது பதிவாகியுள்ளது.
இந்த எதிர்பாராத விபத்துக்கான உண்மையான காரணத்தை கண்டறிய லுஃப்தான்சா நிறுவனத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விமானப் பயணத்துக்கு முன்பே நிகழ்ந்த இந்த சம்பவம், பிராங்க்ஃபுர்ட் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
July 26, 2026, 4:44 pm
கடுமையான காட்டுத்தீ: பிரான்ஸும் ஸ்பெயினும் திணறுகின்றன
July 26, 2026, 10:58 am
இந்தோனேசியாவில் 70 கிலோ தங்கத்துடன் முன்னாள் ஊழல் ஒழிப்பு அதிகாரி கைது
July 24, 2026, 4:46 pm
அமெரிக்காவின் புதிய வரி விதிப்புக்குச் சீனா கடும் கண்டனம்
July 24, 2026, 3:05 pm
செங்கடலில் 2 சவூதி அரேபிய எண்ணெய் கப்பல்கள் மீது ஹூதி போராட்டவாதிகள் தாக்குதல்
July 23, 2026, 12:56 pm
ஆய்வறிக்கை விளக்கக் கூட்டத்தில் பாம்புடன் கூட்டத்தை நடத்திய பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்
July 23, 2026, 11:22 am
குடிபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் இரு சுவிஸ் நாட்டு விமானிகள் பணி இடைநீக்கம்
July 23, 2026, 10:04 am
நாசி கொரெங்கில் கரப்பான் பூச்சி: ஆடவர் அதிர்ச்சி
July 22, 2026, 5:39 pm
