செய்திகள் இந்தியா
பிஹார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்
பாட்னா:
பிஹார் மாநிலம் முசாபர்பூர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர், 20 பேர் காயமடைந்தனர்.
பிஹார் மாநிலம் முசாபர்பூர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்து பின்னர் கட்டிடம் முழுவதும் வேகமாக பரவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீ அணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் மூத்த காவல் கண்காணிப்பாளர் காந்தேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
தீ விபத்து சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் நிஷாந்த் தெரிவித்துள்ளார்.
விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
இந்த துயரச் சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் சாம்ராட் சவுத்ரி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்த நிலையில், இன்று முசாபர்பூரில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நாடு தழுவிய போராட்டம்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
