செய்திகள் இந்தியா
பாரம்பரியத்தை உடைத்து சவுதிக்கான இந்தியத் தூதராக முஸ்லிம் அல்லாதவரை நியமித்தது ஒன்றிய அரசு
ஹைதராபாத்:
நீண்டகால இராஜதந்திர மரபை உடைத்து, சவுதி அரேபியாவுக்கான தனது முதல் இஸ்லாமியர் அல்லாத தூதராக விபுலை இந்தியா நியமித்துள்ளது.
தற்போது கத்தாருக்கான இந்திய தூதராகப் பணியாற்றி வரும் விபுல், விரைவில் ரியாத்தில் தனது புதிய பொறுப்பை ஏற்கவுள்ளார் என இந்திய வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.
முஸ்லிம்களின் இரு புனிதத் தலங்களான மஸ்ஜிதுல் ஹரம், மஸ்ஜிதுந் நபவி அமைந்துள்ள சவுதி அரேபியாவுடன் இந்தியா கொண்டுள்ள உறவு எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதனால், பாரம்பரியமாக முஸ்லிம் இராஜதந்திரிகளே அந்நாட்டிற்கான தூதர்களாக நியமிக்கப்பட்டு வந்தனர்.
இந்த புதிய நியமனம், இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை, இராஜதந்திர அணுகுமுறையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
சவுதி அரேபியாவில் சுமார் 27 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருவதுடன், ஆண்டுதோறும் 1.75 லட்சத்திற்கும் அதிகமான இந்திய ஹஜ் யாத்திரிகர்கள் அந்நாட்டிற்குச் செல்கின்றனர்.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 4:54 pm
கள்ளக் காதலியுடன் ஊர் சுற்றியபோது காரை இடைமறித்த மனைவியை பானெட்டில் இழுத்து சென்ற கணவர்
October 3, 2026, 3:44 pm
இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு, இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் பதாகை ஏந்தி நன்றி தெரிவித்தனர்
October 1, 2026, 8:31 pm
டில்லியில் பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
October 1, 2026, 5:55 pm
174 பேர் இருந்த விமானத்தைக் காப்பாற்ற உதவிய இந்திய விமானி
September 30, 2026, 10:34 am
டெல்லியில் இன்று நடைபெறும் ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிக்கிறது: டி.கே.எஸ். இளங்கோவன் அறிவிப்பு
September 28, 2026, 1:47 pm
பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி
September 26, 2026, 9:26 pm
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நாடு தழுவிய போராட்டம்
September 23, 2026, 3:13 pm
பிகாரில் கொட்டித்தீர்த்த கனமழை: 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
September 21, 2026, 10:20 pm
