செய்திகள் மலேசியா
உலக அரங்கில் மீண்டும் ஒளிர்ந்த மலேசிய ஹஜ் நிர்வாகம்: வெற்றிகரமாக தாயகம் திரும்பத் தொடங்கிய புனிதப் பயணிகள்
செப்பாங்:
2026 ஹஜ் பருவத்தின் இரண்டாம் கட்டம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. அதன் அடையாளமாக, 329 மலேசிய ஹஜ் புனிதப் பயணிகள் கொண்ட முதல் குழு பாதுகாப்பாக கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
பிரதமர் துறை (மத விவகாரங்கள்) அமைச்சர் டாக்டர் ஸுல்கிஃப்லி ஹசான், இந்த ஆண்டுக்கான ஹஜ் நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவித்தார். உலகின் சிறந்த ஹஜ் நிர்வாகத்திற்கான 'லப்பைக்கும் டயமண்ட் விருது' தாபுங் ஹாஜிக்கு கிடைத்தது மலேசியாவுக்கு பெருமை சேர்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த ஆண்டு ஹஜ் பருவத்தில், 17 மலேசிய யாத்திரிகர்கள் புனித பூமியில் உயிரிழந்துள்ளனர், பெரும்பாலானோர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 65 பேர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மலேசிய யாத்திரிகர்களின் ஒழுக்கம், கட்டுப்பாடு, சுத்தம் பேணும் பண்பு, விதிமுறைகளை மதிக்கும் அணுகுமுறை சர்வதேச அளவில் நாட்டின் நற்பெயரை உயர்த்தியதாகவும் அமைச்சர் பாராட்டினார்.
மொத்தம் 31,600 ஹஜ் யாத்திரிகர்களைத் தாயகம் அழைத்து வர 100 சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இறுதி விமானம் ஜூலை 1 ஆம் தேதி மலேசியா வந்தடையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 4, 2026, 12:07 pm
குவைத் சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல்: மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை
June 4, 2026, 11:26 am
இந்த நேரத்தில் பணிகளை முடிப்பதே அரசாங்கத்தின் முன்னுரிமை: பிரதமர்
June 4, 2026, 10:21 am
எரிசக்தி மாற்றத்தில் மலேசியாவின் புதிய பயணம்: ETCon26 மாநாட்டை இன்று தொடக்கிவைக்கும் பிரதமர்
June 3, 2026, 11:29 pm
முக்கிய மலாய் கட்சிகளின் ஒன்றிணைப்பு ஜொகூர் மாநிலத் தேர்தலில் தொடங்கலாம்: துவான் இப்ராஹிம்
June 3, 2026, 11:07 pm
எதிர்ப்பைத் தொடர்ந்து ஹலால் சின்னத்தை அகற்றும்படி பினாங்கு காபி கடைக்கு உத்தரவிடப்பட்டது
June 3, 2026, 11:03 pm
