செய்திகள் மலேசியா
செந்தோசாவை சுத்தம், பசுமை கொண்ட தொகுதியாக உருவாக்கும் நோக்கில் புதிய பயணம் தொடங்கியது: குணராஜ்
கிள்ளான்:
பண்டார் செந்தோசாவை சுத்தம், பசுமை கொண்ட தொகுதியாக உருவாக்கும் நோக்கில் புதிய பயணம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் இதனை கூறினார்.
செந்தோசா சட்டமன்றத் தொகுதியை மேலும் சுத்தமாகவும் பசுமையாகவும் மாற்றும் நோக்கில், Clean & Green DUN Sentosa 2026 திட்டம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
கிள்ளான் மாநகர் மன்றத் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ஹமித் ஹுசைன் இத்திட்டத்தை தொடக்கி வைத்தார்.
அவரது வருகை நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பூட்டியதோடு, செந்தோசா மக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தூய்மை குறித்த விழிப்புணர்வை வலுப்படுத்தும் ஊக்கத்தையும் வழங்கியது.
செந்தோசா தொகுதியை சுத்தமான, பசுமையான மற்றும் நிலைத்தன்மை கொண்ட சமூகமாக மாற்றுவதற்கான உறுதியை இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்துவதாக குணராஜ் கூறினார்.
இந்நிகழ்வில் KDEB Waste Management, மாநகர் மன்ற உறுப்பினர்கள், குடியிருப்பாளர் சங்கங்கள், ருக்குன் தெத்தாங்காஅமைப்புகள், அரசு சாரா அமைப்புகள், பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சமூக மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தொடர்ந்து பங்களித்து வரும் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் பாராட்டப்பட்டது.
இந்தத் திட்டம் வெறும் ஒரு நிகழ்ச்சியாக இல்லாமல், சமூகத்தில் தூய்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நல்ல அயலுறவு கலாச்சாரத்தை வளர்க்கும் நீண்டகால இயக்கத்தின் தொடக்கமாகும்.
வருங்கால தலைமுறைகளுக்காக சுத்தமான, பசுமையான, நிலையான செந்தோசாவை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று டாக்டர் குணராஜ் குறிப்பிட்டார்.
மேலும், திட்ட இயக்குநர் தர்மராஜ், Clean & Green குழுவினருக்கு நிகழ்ச்சியை வெற்றிகரமாக ஏற்பாடு செய்ததற்காக பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 9:38 pm
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பெர்சமா கட்சி போட்டியிடும்: ரபிசி
June 6, 2026, 9:36 pm
கெடிலான் உதவித் தலைவர்களாக சைபுடின், ஜலேஹா நியமனம்
June 6, 2026, 6:10 pm
15 நாட்கள் மர்மமாக மாயம்: இறுதியில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட ஜாஸ்லிண்டா
June 6, 2026, 5:12 pm
மீன்பிடிக்கச் சென்ற சிறுவர்களுக்கு அதிர்ச்சி: வடிகாலில் ஆடவரின் சடலம் கண்டெடுப்பு
June 6, 2026, 2:38 pm
மாராவின் திவேட் கல்வி திட்டம் கிட்டத்தட்ட 100 சதவீத வேலை வாய்ப்பை எட்டியுள்ளது: ஜாஹித்
June 6, 2026, 1:30 pm
