செய்திகள் மலேசியா
முக்கிய மலாய் கட்சிகளின் ஒன்றிணைப்பு ஜொகூர் மாநிலத் தேர்தலில் தொடங்கலாம்: துவான் இப்ராஹிம்
கோலாலம்பூர்:
முக்கிய மலாய் கட்சிகளின் ஒன்றிணைப்பு ஜொகூர் மாநிலத் தேர்தலில் தொடங்கலாம்.
பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் இதனை கூறினார்.
நாட்டில் மலாய், முஸ்லிம் அரசியல் பலத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக, முக்கிய மலாய் அரசியல் கட்சிகளான பாஸ், அம்னோ ஆகியவற்றின் ஒன்றிணைப்பு ஜொகூர் மாநிலத் தேர்தலுடன் தொடங்கலாம்.
மலாய் அரசியல் கட்சிகளின் பிளவும், மலாய்களின் அரசியல் பலத்தை ஒன்றிணைக்கத் தவறியதும், இன்று நிகழும் விளைவுகளை இந்தச் சமூகம் சந்திக்கக் காரணமாக அமைந்துள்ளது.
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழை அங்கீகரிக்கும் பிரச்சினை, மலாய் ஆட்சியாளர்களின் ஆணைகளை எதிர்த்து நடத்தப்படும் நடவடிக்கைகள், மலாய் அல்லாத பெரும்பான்மைப் பகுதிகளில் நில அந்தஸ்து மாற்றம், அத்துடன் அரசின் ஷரியா சட்டங்களை எதிர்ப்பதற்கான முயற்சிகள் உள்ளிட்ட, தீவிர கவனம் தேவைப்படும் பல முக்கியப் பிரச்சினைகளை அவர் சுட்டிக்காட்டினார்.
நிலைமை கைமீறிப் போவதற்குள், மலாய் அரசியலின் முக்கியத் தலைவர்கள், குறிப்பாக பாஸ், அம்னோ கட்சிகளின் தலைவர்கள், உடனடியாகச் செயல்பட இது ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இந்த ஒருங்கிணைப்பு முயற்சி, ஜொகூர் மாநிலத் தேர்தலில் தொடங்கி, துரிதப்படுத்தப்பட வேண்டும்.
மேலும் எதிர்காலத்திலும் தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 9:38 pm
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பெர்சமா கட்சி போட்டியிடும்: ரபிசி
June 6, 2026, 9:36 pm
கெடிலான் உதவித் தலைவர்களாக சைபுடின், ஜலேஹா நியமனம்
June 6, 2026, 6:10 pm
15 நாட்கள் மர்மமாக மாயம்: இறுதியில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட ஜாஸ்லிண்டா
June 6, 2026, 5:12 pm
மீன்பிடிக்கச் சென்ற சிறுவர்களுக்கு அதிர்ச்சி: வடிகாலில் ஆடவரின் சடலம் கண்டெடுப்பு
June 6, 2026, 2:38 pm
மாராவின் திவேட் கல்வி திட்டம் கிட்டத்தட்ட 100 சதவீத வேலை வாய்ப்பை எட்டியுள்ளது: ஜாஹித்
June 6, 2026, 1:30 pm
