செய்திகள் மலேசியா
ரோன் 97, மானியம் இல்லாத ரோன் 95, டீசல் ஆகியவற்றின் விலைகள் குறைந்துள்ளன
புத்ராஜெயா:
தீபகற்ப மலேசியாவில் ரோன் 97 பெட்ரோல், மானியமில்லாத ரோன் 95, டீசல் ஆகியவற்றின் சில்லறை விலைகள் குறைந்துள்ளன.
இது ஜூன் 4 முதல் 10 வரையில் அமலில் இருக்கும் என்று நிதியமைச்சு ஓர் அறிக்கையில் கூறியது.
ரோன் 97 பெட்ரோலின் சில்லறை விலை ஒரு லிட்டருக்கு 30 சென் குறைந்து, 4.65 ரிங்கிட்டில் இருந்து 4.35 ரிங்கிட்டாக குறைந்துள்ளது.
மானியமில்லாத ரோன் 95 பெட்ரோலின் விலை ஒரு லிட்டருக்கு 20 சென் குறைந்து, 3.92 ரிங்கிட்டில் இருந்து 3.72 ரிங்கிட்டாக சரிந்துள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.
தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை முன்பு ஒரு லிட்டருக்கு 4.87 ரிங்கிட்டாக இருந்தது.
தற்போது அது 20 சென் குறைந்து 4.67 ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் சராசரி சர்வதேச சந்தை விலையில் ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து குறைக்கப்பட்ட இந்த வாரத்திற்கான தானியங்கி விலை நிர்ணய முறை சூத்திரத்திற்கு ஏற்ப இந்த புதிய சில்லறை விலை சரிசெய்தல் செய்யப்பட்டுள்ளது என அமைச்சு கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 9:38 pm
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பெர்சமா கட்சி போட்டியிடும்: ரபிசி
June 6, 2026, 9:36 pm
கெடிலான் உதவித் தலைவர்களாக சைபுடின், ஜலேஹா நியமனம்
June 6, 2026, 6:10 pm
15 நாட்கள் மர்மமாக மாயம்: இறுதியில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட ஜாஸ்லிண்டா
June 6, 2026, 5:12 pm
மீன்பிடிக்கச் சென்ற சிறுவர்களுக்கு அதிர்ச்சி: வடிகாலில் ஆடவரின் சடலம் கண்டெடுப்பு
June 6, 2026, 2:38 pm
மாராவின் திவேட் கல்வி திட்டம் கிட்டத்தட்ட 100 சதவீத வேலை வாய்ப்பை எட்டியுள்ளது: ஜாஹித்
June 6, 2026, 1:30 pm
