செய்திகள் மலேசியா
எரிசக்தி மாற்றத்தில் மலேசியாவின் புதிய பயணம்: ETCon26 மாநாட்டை இன்று தொடக்கிவைக்கும் பிரதமர்
கோலாலம்பூர்:
நிலையான, பசுமையான எதிர்காலத்தை நோக்கிய மலேசியாவின் எரிசக்தி மாற்றப் பயணத்திற்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும் வகையில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் இன்று எரிசக்தி மாற்ற மாநாடு 2026 (ETCon26)-ஐ தொடக்கிவைக்கிறார்.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்தப் பன்னாட்டு மாநாடு, நாட்டின் எரிசக்தி மாற்றக் கொள்கைகளை விரைவுபடுத்துவதோடு, உலகளாவிய நிபுணர்கள், முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்களை ஒரே மேடையில் இணைக்கும் முக்கிய தளமாக அமைந்துள்ளது.
"எரிசக்தி & செயற்கை நுண்ணறிவு: எரிசக்தி மாற்றத்திற்கான சக்திவாய்ந்த கூட்டணி" என்ற கருப்பொருளில் நடைபெறும் மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் எரிசக்தித் துறையும் ஒன்றிணைந்து எதிர்கால வளர்ச்சியை எவ்வாறு வடிவமைக்கின்றன என்பது குறித்து கவனம் செலுத்தப்படுகிறது.
60-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 4,000 பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்த மாநாடு, மலேசியாவை உலகின் முன்னணி பசுமையான, நிலையான வளர்ச்சி மையமாக உருவாக்கும் முயற்சியில் முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
மடானி அரசாங்கத்தின் நிலையான வளர்ச்சி இலக்குகளை உலக அரங்கில் எடுத்துக்காட்டும் முக்கிய நிகழ்வாக ETCon26 பார்க்கப்படுகிறது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 4, 2026, 11:26 am
இந்த நேரத்தில் பணிகளை முடிப்பதே அரசாங்கத்தின் முன்னுரிமை: பிரதமர்
June 3, 2026, 11:29 pm
முக்கிய மலாய் கட்சிகளின் ஒன்றிணைப்பு ஜொகூர் மாநிலத் தேர்தலில் தொடங்கலாம்: துவான் இப்ராஹிம்
June 3, 2026, 11:07 pm
எதிர்ப்பைத் தொடர்ந்து ஹலால் சின்னத்தை அகற்றும்படி பினாங்கு காபி கடைக்கு உத்தரவிடப்பட்டது
June 3, 2026, 11:03 pm
