செய்திகள் மலேசியா
குவைத் சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல்: மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை
கோலாலம்பூர்:
குவைத் சர்வதேச விமான நிலையத்தை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட ட்ரோன், ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து, அங்குள்ள அனைத்து மலேசியர்களும் பாதுகாப்பாக இருப்பதாக வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், அங்கு உள்ள நிலவரத்தை விஸ்மா புத்ரா தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குப் பின்னர், குவைத் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதுடன், அனைத்து வணிக விமான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது விமான நிறுவனங்களைத் தொடர்புகொண்டு மாற்று பயண ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை, குவைத், அண்டை பிராந்தியங்களில் உள்ள மலேசியர்கள் உயர் விழிப்புணர்வுடன் இருந்து, உள்ளூர் அதிகாரிகளின் பாதுகாப்பு உத்தரவுகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
மேலும், இதுவரை பதிவு செய்யாத மலேசியர்கள், அவசர உதவிகளை விரைவாகப் பெறுவதற்காக இ-கான்சுலர் தளத்தில் உடனடியாக தங்களது விவரங்களைப் பதிவு செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
"பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்தாலும், குவைத்தில் உள்ள மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்" என விஸ்மா புத்ரா உறுதியளித்துள்ளது.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 9:38 pm
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பெர்சமா கட்சி போட்டியிடும்: ரபிசி
June 6, 2026, 9:36 pm
கெடிலான் உதவித் தலைவர்களாக சைபுடின், ஜலேஹா நியமனம்
June 6, 2026, 6:10 pm
15 நாட்கள் மர்மமாக மாயம்: இறுதியில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட ஜாஸ்லிண்டா
June 6, 2026, 5:12 pm
மீன்பிடிக்கச் சென்ற சிறுவர்களுக்கு அதிர்ச்சி: வடிகாலில் ஆடவரின் சடலம் கண்டெடுப்பு
June 6, 2026, 2:38 pm
மாராவின் திவேட் கல்வி திட்டம் கிட்டத்தட்ட 100 சதவீத வேலை வாய்ப்பை எட்டியுள்ளது: ஜாஹித்
June 6, 2026, 1:30 pm
