செய்திகள் மலேசியா
செந்தூல் காளியம்மன் ஆலயத் திருப்பணிக்கு நிதி திரட்டும் நோக்கில் அம்மன் உருவம் கொண்ட தங்க காசு, தங்க அம்மன் சிலை விற்பனை அறிமுகம்: சிஆர் கார்த்திக்
கோலாலம்பூர்:
செந்தூல் காளியம்மன் ஆலயத் திருப்பணிக்கு நிதி திரட்டும் நோக்கில் அம்மன் உருவம் கொண்ட தங்க காசு, தங்க அம்மன் சிலை விற்பனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இளம் தொழில் முனைவர் சிஆர் கார்த்திக் இதனை தெரிவித்தார்.
நாட்டில் மிகவும் பிரபலமான
செந்தூல் தேவி ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயம் தற்போது பல லட்சம் வெள்ளி செலவில் கட்டப்பட்டு வருகிறது.
இரண்டு ஆண்டுகளில் இந்த ஆலயத்தை பிரமாண்டமான முறையில் கட்டி முடிக்க கோவில் நிர்வாகம் ஏற்பாடுகளை முன் எடுத்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியது.
அவ்வகையில் இந்த ஆலய கட்டுமான பணி வெற்றி பெற 0.2 கிராம் கொண்ட அம்மன் உருவம் பொறிக்கப்பட்ட தங்க காசு விற்பனை அறிமுகம் செய்யப்படுகிறது.
இந்த தங்க காசு விலை 501 வெள்ளி மட்டுமே.
மேலும் 70 கிராம் எடைக் கொண்ட சுத்த தங்கம் கொண்ட அம்மன் சிலை 60,000 வெள்ளியாகும்.
9 நாட்கள் பூஜையில் வைக்கப்படும் அம்மன் சிலையை 60,000 வெள்ளிக்கு மேல் கொடுத்து வாங்கும் உரிமையாளரிடம் முறையாக ஒப்படைக்கப்படும்.
தங்க காசு, தங்க அம்மன் சிலை விற்பனை செய்யும் அங்கீகாரம் கோவில் நிர்வாகத்திடம் வழங்கப்படுகிறது.
மேலும் தங்க காசு விற்பனை நிதி அனைத்தும் கோவில் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று அவர் சொன்னார்
இதனிடையே செந்தூல் காளியம்மன் கோவில் கருவறைகள் அனைத்தும் கருங்கற்களால் அமைக்கிறது என்று கவிமாறன் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சிஆர் கார்த்திக், கவிமாறன், ஆலயத் தலைவர் சுரேந்திரன், ஆலய நிர்வாகத்தினர் கலந்து சிறப்பித்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 9:38 pm
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பெர்சமா கட்சி போட்டியிடும்: ரபிசி
June 6, 2026, 9:36 pm
கெடிலான் உதவித் தலைவர்களாக சைபுடின், ஜலேஹா நியமனம்
June 6, 2026, 6:10 pm
15 நாட்கள் மர்மமாக மாயம்: இறுதியில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட ஜாஸ்லிண்டா
June 6, 2026, 5:12 pm
மீன்பிடிக்கச் சென்ற சிறுவர்களுக்கு அதிர்ச்சி: வடிகாலில் ஆடவரின் சடலம் கண்டெடுப்பு
June 6, 2026, 2:38 pm
மாராவின் திவேட் கல்வி திட்டம் கிட்டத்தட்ட 100 சதவீத வேலை வாய்ப்பை எட்டியுள்ளது: ஜாஹித்
June 6, 2026, 1:30 pm
