செய்திகள் மலேசியா
10 ஆண்டு மலேசிய கடப்பிதழுக்கான கட்டணம் 350 ரிங்கிட்
புத்ராஜெயா:
10 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் புதிய மலேசியக் கடவுச்சீட்டிற்கான கட்டணம் 350 ரிங்கிட் என நேற்று வெளியிடப்பட்ட அரசாங்க அரசிதழின் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் கையெழுத்திட்ட அரசிதழின் படி,
60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய நபர்களுக்கு 175 ரிங்கிட் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும்.
மாற்றுத்திறனாளிகள் அட்டை வைத்திருப்பவர்களுக்குக் கடப்பிதழ் இலவசமாக வழங்கப்படுகின்றன.
தற்போது, மலேசியர்களுக்கு ஐந்து வருடங்கள் செல்லுபடியாகும் கடப்பிதழுக்கு 200 ரிங்கிட் கட்டணமும், மூத்த குடிமக்களுக்கு 100 ரிங்கிட் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
சேதமடைந்த அல்லது தொலைந்துபோன கடவுச்சீட்டுகளை மாற்றுவதற்கான கட்டணத்தையும் அரசிதழ் நிர்ணயித்துள்ளது.
இதில், 13 முதல் 59 வயதுக்குட்பட்ட குடிமக்களுக்கு முதல் முறை மாற்றுவதற்கான கட்டணம், முன்பு 400 ரிங்கிட்டாக இருந்த நிலையில், தற்போது 550 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.
இரண்டாவது முறை மாற்றுவதற்கு 850 ரிங்கிச் கட்டணமும், அதைத் தொடர்ந்து மாற்றுவதற்கு 1,350 ரிங்கிட் கட்டணமும் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 9:38 pm
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பெர்சமா கட்சி போட்டியிடும்: ரபிசி
June 6, 2026, 9:36 pm
கெடிலான் உதவித் தலைவர்களாக சைபுடின், ஜலேஹா நியமனம்
June 6, 2026, 6:10 pm
15 நாட்கள் மர்மமாக மாயம்: இறுதியில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட ஜாஸ்லிண்டா
June 6, 2026, 5:12 pm
மீன்பிடிக்கச் சென்ற சிறுவர்களுக்கு அதிர்ச்சி: வடிகாலில் ஆடவரின் சடலம் கண்டெடுப்பு
June 6, 2026, 2:38 pm
மாராவின் திவேட் கல்வி திட்டம் கிட்டத்தட்ட 100 சதவீத வேலை வாய்ப்பை எட்டியுள்ளது: ஜாஹித்
June 6, 2026, 1:30 pm
