செய்திகள் மலேசியா
ஜொகூர் தேர்தலில் மடானி இல்லை; அனைத்து இடங்களிலும் தேசிய முன்னணி போட்டியிடும்: ஜாஹித்
கோலாலம்பூர்:
வரும் ஜொகூர் மாநிலத் தேர்தலில் மடானி அரசாங்கத்தின் ஒத்துழைப்பு கிடையாது.
ஆக அனைத்து இடங்களிலும் தேசிய முன்னணி போட்டியிடும் என்று அதன் தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி கூறினார்.
ஜொகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் மோதல்களைத் தவிர்ப்பதற்காக ஒரு உடன்பாட்டை எட்ட நம்பிக்கை கூட்டணி தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விரும்புகிறார்.
இருந்த போதிலும் இத்தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிடும் தனது திட்டங்களிலிருந்து தேசிய முன்னணி பின்வாங்கவில்லை.
அதன் அடிப்படையில் அனைத்து 56 தொகுதிகளிலும் தேசிய முன்னணி போட்டியிடும்.
இந்த இடங்களுக்குமான வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 9:38 pm
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பெர்சமா கட்சி போட்டியிடும்: ரபிசி
June 6, 2026, 9:36 pm
கெடிலான் உதவித் தலைவர்களாக சைபுடின், ஜலேஹா நியமனம்
June 6, 2026, 6:10 pm
15 நாட்கள் மர்மமாக மாயம்: இறுதியில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட ஜாஸ்லிண்டா
June 6, 2026, 5:12 pm
மீன்பிடிக்கச் சென்ற சிறுவர்களுக்கு அதிர்ச்சி: வடிகாலில் ஆடவரின் சடலம் கண்டெடுப்பு
June 6, 2026, 2:38 pm
மாராவின் திவேட் கல்வி திட்டம் கிட்டத்தட்ட 100 சதவீத வேலை வாய்ப்பை எட்டியுள்ளது: ஜாஹித்
June 6, 2026, 1:30 pm
