செய்திகள் மலேசியா
புதிய கம்பார் மருத்துவமனைத் திட்டத்தை முந்தைய அரசு தாமதப்படுத்தியது: டத்தோ சிவநேசன் விளக்கம்
கம்பார்:
புதிய கம்பார் மருத்துவமனைத் திட்டத்தை முந்தைய அரசு தாமதப்படுத்தியது என்று பேரா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ சிவநேசன் விளக்கமளித்தார்.
கடந்த மே 23 ஆம் தேதி பெய்த கனமழையை தொடர்ந்து கம்பார் மருத்துவமனையின் கூரை பகுதி சேதமடைந்தது.
இதனால் மழை நீர் மருத்துவமனையில் புகுந்த சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் பரவியது.
கருத்துச் சுதந்திரம் அனைவருக்கும் உரியது. அதற்கான பொய்யான தகவல்களையும் அவதூறுகளையும் பரப்புவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
அன்றைய தினம் கம்பார் முழுவதும் பெய்த கனமழை, பலத்த காற்று காரணமாக மருத்துவமனையின் சில பகுதிகளில் நீர் கசிவு ஏற்பட்டது.
இதனால் தற்காலிக மின் விநியோகத் தடையும் ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து புகார் கிடைத்த உடனேயே தொழில்நுட்பக் குழுவினர் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டது.
மேலும் ஆரம்பகட்ட விசாரணையில் கனமழை, பலத்த காற்று, குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் தொல்லை காரணமாக கூரை அமைப்பில் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என கண்டறியப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அதே வேளையில் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு வழக்கம்போல செயல்பட்டதாகவும், நோயாளிகளுக்கான சேவைகள் எவ்வித பாதிப்பும் இன்றி தொடர்ந்ததாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில் கம்பார் புதிய மருத்துவமனை கட்டுமானம் தொடர்பாக முன்னாள் பேரா சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ டாக்டர் மஹ் ஹாங் சூன் வெளியிட்ட கருத்துகளுக்கும் பதிலளிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது.
கடந்த 2008 முதல் 2018 வரை சுகாதார அமைச்சையும் மாநில சுகாதார நிர்வாகத்தையும் மசீச, மஇகா தலைவர்கள் பொறுப்பேற்றிருந்த போதிலும், புதிய கம்பார் மருத்துவமனைக்கான நிதி ஒதுக்கீடு எப்போது வழங்கப்பட்டது என்பது குறித்து அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.
கம்பார் புதிய மருத்துவமனைக்கான 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு 2019ஆம் ஆண்டு மத்திய அரசு வரவு செலவுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது.
இருந்தாலும் முன்னர் அடையாளம் காணப்பட்ட நிலம் சுரங்கக் குழிகள் அதிகமாக இருந்ததால் கட்டுமானத்திற்கு பொருத்தமற்றதாக இருந்தது.
பின்னர் தாம் பதவியேற்ற பிறகு கம்பார் சங்காட் பாரு பகுதியில் புதிய நிலத்தை அடையாளம் காணும் முயற்சிகளை மேற்கொண்டேன்.
புதிய மருத்துவமனைத் திட்டம் தொடர்பான தற்போதைய நிலை குறித்து விரைவில் மேலதிக தகவல்கள் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 4, 2026, 2:13 pm
குவைத்தில் நடந்த ட்ரோன் தாக்குதலில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை: விஸ்மா புத்ரா
June 4, 2026, 12:53 pm
ஜொகூர் தேர்தலில் மடானி இல்லை; அனைத்து இடங்களிலும் தேசிய முன்னணி போட்டியிடும்: ஜாஹித்
June 4, 2026, 12:52 pm
10 ஆண்டு மலேசிய கடப்பிதழுக்கான கட்டணம் 350 ரிங்கிட்
June 4, 2026, 12:51 pm
கடந்த 12 மணி நேரத்திற்குள் சபா, சரவாக்கில் 2 பலவீனமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன
June 4, 2026, 12:51 pm
11 மாத குழந்தையைக் கொன்றதாக இரண்டு குழந்தைகளின் தாய் மீது குற்றம் சாட்டப்பட்டது
June 4, 2026, 12:50 pm
