நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜூலை 1 முதல் பினாங்கில் புதிய நீர் கட்டணம் அமல்படுத்தப்படுகிறது 

ஜார்ஜ் டவுன்: 

ஓராண்டு கால ஒத்திவைப்புக்குப் பிறகு, பினாங்கு மாநிலத்தில் உள்நாட்டு, வர்த்தகப் பயன்பாட்டாளர்களுக்கான புதிய நீர் கட்டண விகிதம் வரும் ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது.

மாநில போக்குவரத்து, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் குழுத் தலைவர் ஜைரில் கீர் ஜொஹாரி, இந்த மாற்றம் மாதத்திற்கு 35 கன மீட்டர் அல்லது அதற்கும் குறைவாக நீர் பயன்படுத்தும் 82 விழுக்காடு குடும்பங்களைப் பாதிக்கும் என்றும், அவர்களுக்கு மாதத்திற்கு சராசரியாக 2.55 ரிங்கிட் (8.5 சென்) மட்டுமே கூடுதல் செலவாகும் என்றும் தெரிவித்தார்.

முதல் 20,000 லிட்டர் நீர் பயன்பாட்டுக்கான கட்டணம் 62 சென்னில் இருந்து 65 சென்னாக உயர்கிறது. அதேவேளை, 20,000 முதல் 35,000 லிட்டர் வரையிலான பயன்பாட்டுக்கான கட்டணம் 1.17 ரிங்கிட்டிலிருந்து 1.30 ரிங்கிட்டாக அதிகரிக்கப்படுகிறது.

இருப்பினும், இந்த உயர்வுக்குப் பிறகும் மலேசியாவில் மிகவும் குறைந்த நீர் கட்டணத்தைக் கொண்ட மாநிலமாக பினாங்கு தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், வழிபாட்டுத் தலங்கள், நலவாரிய அமைப்புகள், சில குறிப்பிட்ட பிரிவுகள் இந்தக் கட்டண மாற்றத்தால் பாதிக்கப்படாது என PBAPP தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ கே. பத்மநாதன் தெரிவித்தார்.

மேலும், பெரிய குடும்பங்களைச் சேர்ந்த தகுதியான பயனாளர்கள் 'Skim Rebat Mesra Keluarga' திட்டத்தின் கீழ் ஒவ்வொரு இருமாத நீர் கட்டணத்திலும் 20 ரிங்கிட் தள்ளுபடி பெற விண்ணப்பிக்கலாம்.

நீர் விநியோக சேவையின் தரத்தையும், எதிர்கால உள்கட்டமைப்பு மேம்பாட்டையும் உறுதி செய்வதற்காகவே இந்தக் கட்டண மாற்றம் மேற்கொள்ளப்படுவதாக மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset