நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆசியானுக்குள் வர்த்தகத்தை அதிகரிக்க மலேசியா: இந்தோனேசியா வலியுறுத்தல்

ஜகார்த்தா: 

உலகளாவிய அரசியல் பதற்றங்களும் பொருளாதார நிச்சயமற்ற நிலைகளும் அதிகரித்து வரும் நிலையில், தென்கிழக்காசிய நாடுகளுக்கிடையிலான வர்த்தகம், முதலீட்டைக் கணிசமாக உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என மலேசியாவும் இந்தோனேசியாவும் வலியுறுத்தியுள்ளன.

17ஆவது மலேசியா-இந்தோனேசியா இருதரப்பு ஒத்துழைப்பு ஆணைய (JCBC) கூட்டத்தில் இந்த விடயம் முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான் தெரிவித்தார்.

தற்போது, தென்கிழக்காசிய உறுப்பு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் 25 விழுக்காட்டுக்கும் குறைவாகவே உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், உறுப்புநாடுகள் தங்களுக்குள்ளேயே வர்த்தக, முதலீட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றார்.

மேற்கு ஆசிய மோதல்கள், ரஷ்யா–உக்ரைன் போர் போன்ற உலகளாவிய நெருக்கடிகள், பிராந்திய பொருளாதார ஒற்றுமையின் அவசியத்தைத் தெளிவாக உணர்த்தியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், ஆசியான் நாடுகளுக்கிடையிலான இணைப்புகளை மேம்படுத்துதல், மக்களின் சுதந்திரமான பயணத்தை எளிதாக்குதல், பொருளாதார ஒத்துழைப்பை ஆழப்படுத்துதல் தொடர்பாகவும் இருநாடுகள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டன.

"ஆசியான் நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே உலகப் பொருளாதார சவால்களைத் திறம்பட எதிர்கொள்ள முடியும்; அதன் பலன் நேரடியாக மக்களுக்குச் சென்றடையும்" என்ற உறுதியான நிலைப்பாடு இந்தக் கூட்டத்தின்  மூலம் வெளிப்படுத்தப்பட்டது.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset