செய்திகள் மலேசியா
BREAKING NEWS: நெகிரி செம்பிலான் சட்டமன்றம் கலைக்கப்பட்டது
சிரம்பான்:
16ஆவது பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது.
யாங் டி-பெர்துவான் பெசார், துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர், தனது கோரிக்கையை ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து சட்டமன்றம் கலைக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அடுத்த 60 நாட்களில் மாநில தேர்தல் நடைபெறும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூண் கூறினார்.
யாங் டி-பெர்டுவான் பெசார் பதவியிலிருந்து துவாங்கு முஹ்ரிஸைப் பதவியிறக்கம் செய்யக் கோரிய நான்கு மசோதாக்கள் தொடர்பான சர்ச்சையைக் கையாண்ட விதம் குறித்து, கடந்த மாதம் தேசிய முன்னணியின் 14 சட்டமன்ற உறுப்பினர்களும் அமினுடினுக்கான தங்கள் ஆதரவைத் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து சர்ச்சை வெடித்தது.
மேலும் இது தொடர்பாக பல வாரங்களாக நீடித்த அரசியல் பதற்றத்தையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு அம்னோ தங்கள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாநில அரசுக்கு ஆதரவளிக்குமாறு அறிவுறுத்தியது.
ஆனால் நம்பிக்கை கூட்டணி, அம்னோ தலைவர்கள் ஒரு தீர்வாக மாநில சட்டமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்று வெளிப்படையாக அழைப்பு விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 4, 2026, 5:12 pm
ஜூலை 1 முதல் பினாங்கில் புதிய நீர் கட்டணம் அமல்படுத்தப்படுகிறது
June 4, 2026, 4:31 pm
ஆசியானுக்குள் வர்த்தகத்தை அதிகரிக்க மலேசியா: இந்தோனேசியா வலியுறுத்தல்
June 4, 2026, 2:13 pm
குவைத்தில் நடந்த ட்ரோன் தாக்குதலில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை: விஸ்மா புத்ரா
June 4, 2026, 12:53 pm
ஜொகூர் தேர்தலில் மடானி இல்லை; அனைத்து இடங்களிலும் தேசிய முன்னணி போட்டியிடும்: ஜாஹித்
June 4, 2026, 12:52 pm
